»   »  என் டான்ஸ் என்றாலே 'அந்த 3' பேருக்கும் பிடிக்காது: பிரபுதேவா

என் டான்ஸ் என்றாலே 'அந்த 3' பேருக்கும் பிடிக்காது: பிரபுதேவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபுதேவாவின் பிள்ளைகளுக்கு அவரது டான்ஸ் என்றாலே பிடிக்காதாம்.

பிரபுதேவா டான்ஸ் ஆடினால் பார்க்காமல் இருப்பவர்கள் உண்டா? மனிதர் அந்த அளவுக்கு பாம்பு போன்று வளைந்து வளைந்து ஆடுவார். ரப்பர் பாடி போல அது தான் இப்படி ஆடுகிறார் என்று ரசிகர்கள் சொல்வது உண்டு.

இந்நிலையில் நடனம் மற்றும் தேவி படம் பற்றி பிரபுதேவா கூறுகையில்,

தமன்னா

தமன்னா

தேவி படத்திற்காக தமன்னாவும், நானும் கிட்டத்தட்ட 2 வாரங்கள் நடனப் பயிற்சி எடுத்தோம். அதன் பிறகே நடனக் காட்சி படமாக்கப்பட்டது. அதனால் தான் அந்த காட்சி அருமையாக வந்துள்ளது.

டான்ஸ்

டான்ஸ்

என் குழந்தைகள் படம் பார்க்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு எனது டான்ஸ் என்றாலே பிடிக்காது. அவர்களை சாதாரண பள்ளியில் தான் சேர்த்துள்ளேன்.

குழந்தைகள்

குழந்தைகள்

சினிமா மற்றும் பிரபலம் என்பது எல்லாம் தெரியாமல் என் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறேன். அவர்களை சினிமா துறைக்கு வருமாறு கட்டாயப்படுத்த மாட்டேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

என் குழந்தைகள் படங்கள் பார்ப்பது இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி. நான் பள்ளிக்கு செல்லாததால், ஒழுங்காக படிக்காததால் இளம் வயதிலேயே டான்ஸர் ஆனேன். அதனால் என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

3 குழந்தைகள்

3 குழந்தைகள்

பிரபுதேவாவுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor, director, dance master Prabhu Deva said that his kids don't like his dance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil