twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மை நேம் இஸ் பில்லா டூ அண்ணாத்த அண்ணாத்த வரை.. ரஜினிகாந்தின் அட்டகாசமான அறிமுக பாடல்கள்!

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 71வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அவரது படங்களில் இடம்பெற்ற அறிமுக பாடல்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்...

    இயக்குநர் கே பாலச்சந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். 1975ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ரஜினிகாந்த்.

    சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக வலம் வருகிறார். இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

    கேப்டன், பேபி டாடி...ஆர்யாவிற்கு உருகி உருகி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மனைவி சாயிஷாகேப்டன், பேபி டாடி...ஆர்யாவிற்கு உருகி உருகி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மனைவி சாயிஷா

    பத்ம விருதுகள்..

    பத்ம விருதுகள்..

    வசூல் மன்னனாக வலம் வரும் ரஜினிகாந்துக்கு ஜப்பான், சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தமிழக அரசின் விருதுகள், பிலிம் ஃபேர விருதுகள் என குவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் வழங்கி கவுரவித்துள்ளது.

    தாதா சாகேப் பால்கே விருது

    தாதா சாகேப் பால்கே விருது


    சமீபத்தில் நடைபெற்ற நாட்டின் 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு நாட்டின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதுவரை 168 படங்களில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 169வது படத்திற்கான கதையை கேட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ரஜினியின் அறிமுக பாடல்கள்

    ரஜினியின் அறிமுக பாடல்கள்

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த தருணத்தில் அவரது படங்களில் இடம்பெற்ற அட்டகாசமான அறிமுகப் பாடல்கள் குறித்து பார்ப்போம்.. பெரும்பாலும் ரஜினிகாந்தின் அறிமுக பாடல்களை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தான் பாடியிருக்கிறார். அந்த வகையில் 1980ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தில் ரஜினிகாந்தின் அறிமுக பாடலாக மை நேம் இஸ் பில்லா என்ற பாடல் இடம் பெற்றது. இந்த பாடல் அப்போதே பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

    வந்தேன்டா பால்காரன்

    வந்தேன்டா பால்காரன்

    இதேபோல் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்தின் அறிமுக பாடலாக வந்தேன்டா பால்காரன் பாடல் இடம்பெற்றது. தேவா இசையில் வைரமுத்து வரிகளில் இந்த பாடல் உருவானது. இந்தப் பாடலையும் எஸ்பி பாலசுப்பிரமணியம்தான் பாடியிருந்தார். இதேபோல் எஜமான் படத்தில் இடம்பெற்ற எஜமான் காலடி மண்ணெடுத்து பாடலும் ரஜினிக்கான சிறப்பான அறிமுக பாடலாக இருந்தது. இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் இந்த பாடலை பாடியிருந்தார்.

    நான் ஆட்டோக்காரன்...

    நான் ஆட்டோக்காரன்...

    அடுத்த பாஷா படத்தில் இடம்பெற்ற நான் ஆட்டோக்காரன் பாடலும் ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்களில் ஒன்று. தேவா இசையில் வைரமுத்து வரிகளில் உருவான இந்த பாடலை ரஜினிக்காக எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இதேபோல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலும் ரஜினிகாந்தின் அறிமுக பாடல் வரிசையில் செம ஹிட்டான பாடல் ஆகும். ஏஆர் ரஹ்மான் இசையில் வைரமுத்து வரிகளில் எஸ்பிபி குரலில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.

    அதான்டா இதான்டா பாடல்

    அதான்டா இதான்டா பாடல்

    இதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அருணாச்சலம் படத்தில் இடம் பெற்ற அதான்டா இதான்டா பாடலும் ரஜினிகாந்தின் இன்ட்ரோ ஹிட் லிஸ்ட்டில் முக்கியமானது. தேவா இசையில் வைரமுத்து வரிகளில் உருவான இப்பாடலையும் எஸ்பி பாலசுப்பிரமணியம்தான் பாடியிருந்தார். இதேபோல் படையப்பா படத்தில் இடம்பெற்ற எம் பேரு படையப்பா பாடலும் ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்களில் ஒன்று. ஏஆர் ரஹ்மான் இசையில் வைரமுத்து வரிகளில் உருவான இப்பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடியிருந்தார்.

    பல்லேலக்கா பல்லேலக்கா

    பல்லேலக்கா பல்லேலக்கா

    இதேபோல் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற தேவுடா தேவுடா.. பாடலும் ரஜினிகாந்தின் அறிமுக பாடல்களில் சிறந்த ஒன்றாகும். வாலி வரிகளில் வித்யாசாகர் இசையில் உருவான இப்பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம்தான் பாடியிருந்தார். இதேபோல் சிவாஜி படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பல்லேலக்கா பாடலும் சிவாஜியின் அறிமுக பாடல்களில் அட்டகாசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில் நா முத்துக்குமார் வரிகளில் உருவான இப்பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம், ரிஹானா, பென்னி தயால் ஆகியோர் பாடியிருந்தனர்.

    அண்ணாத்த அண்ணாத்த

    அண்ணாத்த அண்ணாத்த


    இதேபோல் தர்பார் படத்தில் இடம்பெற்ற சும்மா கிழி பாடலும், அவருக்கான சிறந்த அறிமுக பாடல்களில் ஒன்றாகும். அனிருத் இசையில் உருவான இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். இந்தப் பாடலையும் எஸ்பி பாலசுப்பிரமணியம் தான் பாடியிருந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் அண்ணாத்த அண்ணாத்த பாடல் ரஜினிகாந்தின் அறிமுக பாடலாக இருந்தது. இமான் இசையில் விவேகா வரிகளில் உருவான இப்பாடலையும் ரஜினிக்காக எஸ்பிபிதான் பாடியிருந்தார். இதுவே ரஜினிக்காக அவர் பாடிய கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    My name is Billa to Annaatthe Rajinikanth's top introduction songs on his birthday. Super Star Rajinikanth celebrates his 71st birthday tomorrow.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X