»   »  அடுத்தது ‘நச்’சுனு அழுத்தமா ஒரு காதல் படம் தான்...: தனுஷ்

அடுத்தது ‘நச்’சுனு அழுத்தமா ஒரு காதல் படம் தான்...: தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மூன்றாவது இந்திப்படம் ஒரு அழுத்தமான காதல் கதையாக இருக்கும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் அவர் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ‘சூதாடி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த இரண்டு படங்களை முடித்தபிறகு அவர் இந்தியில் மூன்றாவது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப் பட்டது.

ஓகே கண்மணி மூலம் இளைஞர்களை மீண்டும் வசீகரித்த மணிரத்னத்துடன் தனுஷ் சேர்வார் என்றும், இப்படம் இந்தியில் அவரது மூன்றாவது படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், இந்தியில் தனது மூன்றாவது படம் குறித்துப் பேசியுள்ளார் தனுஷ்.

தொடர் வெற்றி...

தொடர் வெற்றி...

ஏற்கனவே இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா, ஷமிதாப் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். அந்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்ததால், தமிழைப் போலவே இந்தியிலும் தனுஷுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ராஞ்சனா இயக்குநர்...

ராஞ்சனா இயக்குநர்...

எனவே, இந்தியில் தனது மூன்றாவது படத்தை தேர்வு செய்வதில் நிதானம் காட்டி வந்தார் தனுஷ். இந்நிலையில் தனது மூன்றாவது இந்திப்படத்தையும், முதல் இந்திப் படமான ராஜ்சனாவை இயக்கிய ஆனந்த் எல் ராயே இயக்குகிறார் என தனுஷ் அறிவித்துள்ளார்.

அழுத்தமான காதல் கதை...

அழுத்தமான காதல் கதை...

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "நான் நடித்ததிலேயே இந்த படம் தான் மிக அழுத்தமான காதல் கதையாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

ஒரு நடிகராக என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் நல்ல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Dhanush has said, his next hindi film is an intense love story with Aanand L Rai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil