»   »  "சமீபமா எல்லா ஆம்லெட்டுமே சோகமா இருக்கே"... ஜாலி மூடிற்கு ரூட்டை மாத்தும் கமல்!

"சமீபமா எல்லா ஆம்லெட்டுமே சோகமா இருக்கே"... ஜாலி மூடிற்கு ரூட்டை மாத்தும் கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலின் டிவிட்டர் பதிவின் மூலம், விரைவில் காமெடி படமொன்றில் நடிக்கும் அறிவிப்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது.

படத்திற்குப் படம் வித்தியாசம் காட்டுவதில் பேர் போனவர் நடிகர் கமல். காதல், காமெடி, த்ரில்லர், செண்டிமெண்ட் என அனைத்து வகையறாக்களிலும் படம் பண்ணக் கூடியவர் அவர்.

ஆனால், சமீபகாலமாக தொடர்ந்து சீரியசான படங்களாகவே பண்ணிக் கொண்டிருக்கிறார் கமல்.

சீரியஸ் படங்கள்...

சீரியஸ் படங்கள்...

உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம் என அவரது சமீபத்திய படங்கள் அனைத்திலும் காமெடி மிஸ்ஸிங்.

மாற்றம் தேவை...

மாற்றம் தேவை...

இந்நிலையில் அவருக்கே சிறிய மாற்றம் தேவைப்படுகிறது போல. இதனை அவர் சூசகமாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆம்லெட்...

இரண்டு ஆம்லெட் படங்களையும் கூடவே தனது பழைய (மைக்கேல் மதன காமராஜன்) போட்டோ ஒன்றையும் சேர்த்துப் பதிவு செய்துள்ள கமல், அதில் ‘எனது சமீபத்திய ஆம்லெட்டுகள் எல்லாமே சீரியசாகவே இருக்கின்றன. எனவே, அவற்றை விரைவில் சிரிக்க வைக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில்...

விரைவில்...

இதன் மூலம் விரைவில் கமல் காமெடி படமொன்றில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலா.... காதலா...

காதலா.... காதலா...

ஏற்கனவே, காதலா காதலா, சதிலீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், வசூல்ராஜா உட்பட ஏராளமான காமெடி படங்களில் கமல் நடித்துள்ளார். அவை அனைத்தும் வெற்றிப் படங்களாக இன்றளவும் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
‘My recent omelettes are looking serious . Must make them smile again. I should tickle them more than beat them’ actor Kamal said in Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil