Just In
- 14 min ago
யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?
- 23 min ago
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
- 29 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
- 36 min ago
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Don't Miss!
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- News
சல்லிசல்லியான அதிமுக பிளான்.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை.. சசிகலா மீது குவிந்த கவனம்!
- Sports
சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அன்று அக்கா எடுத்த முடிவால் என் குடும்பம் தப்பியது: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சென்னை: தன் அக்கா எடுத்த ஒரு முடிவால் தான் தன் குடும்பம் கடன் சுமையில் இருந்து தப்பியது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்த கனா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் தனது அக்கா கௌரியுடன் சேர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

டாக்டர்
என் அக்கா என் மீது அதிக பாசம் கொண்டவர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தார். அவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவு. நான் ஒரு டாக்டர் என்று சின்ன குழந்தையில் இருந்தே சொல்லிக் கொண்டிருந்தார். நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நுழைவுத் தேர்வில் 3 மதிப்பெண்கள் குறைவாகிவிட்டது.

கடன்
ரூ. 15 லட்சம் செலவாகும் போன்று. ஃப்ரீ சீட் கிடைக்காது, பணம் கொடுத்து வாங்கிவிடலாம். பரவாயில்லை, கடன் வாங்கலாம் என்று அப்பா அக்காவிடம் தெரிவித்தார். சொன்னபடி பணத்தை கடன் வாங்கி அக்காவுடன் கல்லூரிக்கும் சென்றாகிவிட்டது. பணம் கட்ட நின்று கொண்டிருந்தோம்.

ஃப்ரீ சீட்
பணம் கட்ட 2 நிமிஷத்திற்கு முன்பு அக்கா திடீர் என்று வேண்டாம் அப்பா, பணம் கட்டாதீங்க. நான் மறுபடியும் நுழைவுத்தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் எடுத்து ஃப்ரீ சீட் வாங்கியே படிக்கிறேன் என்றார். அப்பாவை பணம் கட்ட விடாமல் அழைத்து வந்துவிட்டார். அவர் சொன்ன மாதிரியே மீண்டும் நுழைவுத் தேர்வு எழுதி ஃப்ரீ சீட் வாங்கினார்.

அதிர்ச்சி
அக்காவுக்கு சீட் கிடைத்த சில நாட்களில் அப்பா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்பொழுது நான் படித்துக் கொண்டிருந்தேன். அக்கா மட்டும் தடுக்கவில்லை என்றால் அப்பா ரூ. 15 லட்சம் கடனை விட்டுவிட்டு போயிருப்பார். அக்காவும், நானும் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் அப்பா இல்லாமல் கடனை அடைத்திருக்கவே முடியாது.

மரியாதை
அக்காவின் முடிவால் தான் என் குடும்பம் கடனில் இருந்து தப்பியது. எனக்கு அக்கா அப்பா மாதிரி. அப்பா மாதிரி இருந்து என்னை வளர்த்தார். என் அப்பாவுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை அக்காவுக்கு கிடைக்க வைத்தேன் என்றார் சிவகார்த்திகேயன்.