»   »  மீண்டும் மிஷ்கின் - நரேன்

மீண்டும் மிஷ்கின் - நரேன்

Subscribe to Oneindia Tamil


சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் தனது வருகையை ஆணித்தரமாக வெளிப்படுத்திய மிஷ்கின், சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நரேனுடன் சேர்ந்து ஆறுவது சினம் என்ற படத்தை இயக்க வருகிறார்.


சித்திரம் பேசுதடி படத்தை சத்தம் போடாமல் பெரும் ஹிட் படமாக்கியவர் மிஷ்கின். முதலில் படம் பேசப்பட்டது, பின்னர் நரேனும், மிஷ்கினும் பேசப்பட்டனர். ஆனால் கடைசியில் இவர்களை தூக்கி சாப்பிடும் வகையில் மாளவிகா, கானா உலகநாதனின் கலக்கல் வாளமீனு பாட்டு படு ஹிட் ஆகியது.

இந்தப் படத்துக்குப் பிறகு சிறிது காலம் இடைவெளி விட்ட மிஷ்கின் தற்போது மீண்டும் நரேனுடன் சேர்ந்து அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார்.

சமீபத்தில்தான் கல்யாணம் செய்து கொண்ட நரேன், காதல் மனைவி மஞ்சுவுடன் ஜாலியாக ஹனிமூன் போவதை விட்டு விட்டு மிஷ்கினின் படத்தில் நடிக்க வந்து விட்டார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இப்படத்துக்கு ஆறுவது சினம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இரு ஹீரோக்களாம். நரேன் தவிர அம்ஜத் என்ற புதுமுகமும் நடிக்கிறார்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடத்தில் வருகிறாராம் நரேன். நாயகி யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. படத்தில் முன்னணி நடிகை ஒருவரின் டாப்பான குத்துப் பாட்டு இடம் பெறுகிறதாம். எல்லாம் வாளமீனு ஹிட் ஆன சென்டிமென்ட்தான்.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இசையமைப்பாளராக மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுந்தரி.சி. பாபுவே இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

நான் அவனில்லை படத்தைத் தயாரித்த நேமிசந்த் ஜபக்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். படத்தை டிசம்பரில் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

ஆறுவது சினம் - 'கன'மாக இருக்குமா?

Read more about: myshkin, narain
Please Wait while comments are loading...