ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் தனுஷ்...விடாமல் துரத்தும் சர்ச்சைகள்
சென்னை : தனுஷ் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமாகி போய் விட்டது. இதனால் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களும், ரசிகர்களும் இவர் இப்படி செய்வதையே ஏன் வழக்கமாக கொண்டுள்ளார் என குழப்பத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.
தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த தி கிரே மேன், அத்தரங்கி ரே, மாறன் ஆகிய மூன்று படங்களுமே ஓடிடியில் ரிலீசாகின. இருந்தும் இந்த மூன்று படங்களும் படு ஃபிளாப் ஆகின. இருந்தாலும் தனுஷ் விடாமல் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இறுதிக்கட்டத்தில் நானே வருவேன்
மாறன் படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார். நானே வருவேன் படம் கிட்டதட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த படத்தில் தனுஷ் இருவிதமான கெட்அப்களில் நடித்துள்ளார் என்றும், செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் இது. விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், நேற்று படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் மீசை இல்லாமல் ஸ்டைலான இளமை தோற்றத்தில் வாயில் சிகரெட் வைத்து ஊதியபடி தனுஷ் அமர்ந்திருப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் செம வைரலாகி வரும் இந்த போட்டோ, சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

திரும்ப திரும்ப தப்பு பண்றார்
ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி, சமீபத்தில் ரிலீசான மாறன் ஆகிய படங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இல்லாமல் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது சர்ச்சையானது. அதோடு மாறன் படத்தில் மாளவிகா மோகனன் சரக்கடிப்பது போன்ற காட்சிகளும் கடும் எதிர்ப்பை சந்தித்தன. இந்நிலையில் சர்ச்சை வரும் என்று தெரிந்தே மீண்டும் அதே போல் போஸ் கொடுத்து ஃபஸ்ட்லுக் போஸ்டராக வெளியிட்டார்கள். இதனால் ஏன் தனுஷ் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார் என அனைவரும் கேட்டு வருகிறார்கள்.
Recommended Video

கண்டுகொள்ளாத தனுஷ்
இதற்கு முன் சர்கார் பட ஃபஸ்ட்லுக் போஸ்டரிலும் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டது. இது கடும் எதிர்ப்பை சந்தித்ததால், பிறகு சிகரெட் நீக்கப்பட்டு, விஜய் சாதாரணமாக அமர்ந்து லேட்டாப்பை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. ஆனால் தனுஷ் அதை கண்டுகொள்ளாமல், மீண்டும் மீண்டும் புகைபிடிக்கும் காட்சிகளால் தனது இமேஜை கெடுத்துக் கொள்கிறாரோ என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











