»   »  நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட மக்களிடம் எதற்கு பணம் வாங்கணும்னு கேட்ட அஜீத்

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட மக்களிடம் எதற்கு பணம் வாங்கணும்னு கேட்ட அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித் அன்றைக்கே சொன்னார்- எஸ்.வி. சேகர் புதிய தகவல்- வீடியோ

சென்னை: நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு மக்களிடம் எதற்காக படம் வாங்க வேண்டும் என்று அஜீத் கேட்டார் என எஸ்.வி. சேகர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட வேண்டி விஷால் அன்ட் கோ மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை நடத்தினார்கள். இதற்காக சுமார் 350 நடிகர்கள், நடிகைகள் மலேசியாவுக்கு சென்றனர்.

மலேசியா சென்ற இடத்தில் ஜெயம் ரவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கட்டிடம்

கட்டிடம்

நட்சத்திர கலைவிழாவில் அஜீத் குமார் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அஜீத் கூறியதாக எஸ்.வி. சேகர் சொன்னார் என்று ஒரு தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கருத்து

கருத்து

ரசிகர்கள் தியேட்டர்களில் வாங்கும் டிக்கெட்டுகள் மூலம் தான் நமக்கு சம்பளம் கிடைக்கிறது. அப்படி இருக்க சங்க கட்டிடத்திற்கு மக்களிடம் நிதி கேட்காமல் நாமே பணம் போடலாம் என்று அஜீத் கூறியதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளாராம்.

கரெக்ட் தல

கரெக்ட் தல

அஜீத்தின் கருத்தை கேட்ட மக்கள் சரியாக சொன்னீங்க தல. அவர்கள் கட்டிடம் கட்ட நாங்க எதற்கு பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்வார்களாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஏன்?

ஏன்?

நீங்க கட்டிடம் கட்ட நாங்க எதுக்கு பணம் கொடுக்கணும் விஷால்? நீங்க மலேசியா போன காசை வைத்தே கட்டிடம் கட்டியிருக்கலாமே என்று ஆளாளுக்கு விளாசிய நேரத்தில் தான் அஜீத்தின் கருத்து வெளியாகியுள்ளது.

English summary
According to some media reports, actor cum BJP functionary told that Ajith doesn't like actors to get money from people to construct Nadigar Sangam building instead he wants the celebs to spend from their own pockets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X