»   »  கமல்ஹாசனின் "அணில்- ராமர்" பேச்சு... யாருக்கு இந்த "மெசேஜ்"?

கமல்ஹாசனின் "அணில்- ராமர்" பேச்சு... யாருக்கு இந்த "மெசேஜ்"?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கம் கட்டிடம் கட்டும் விவகாரத்தில் 'அணில்கள்தான் தேவை யார் ராமர் எனப் பார்க்க வேண்டாம்' என நடிகர் கமல்ஹாசன் அறிவுரை கூறியிருக்கிறார்.

நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டுவதற்காக கோலிவுட் நடிகர்கள் ஒன்றிணைந்து நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தப் போட்டி வருகின்ற 17 ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் அஜீத் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nadigar Sangam: Kamal Haasan Advice to Ajith?

அஜீத்தின் இந்த முடிவு பலருக்கும் அவர்மேல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருசில நடிகர்கள் அஜித்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சன்டிவி ரூ 9 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.மேலும் நட்சத்திரக் கிரிக்கெட் தொடர்பான கலை நிகழ்ச்சிகளையும், சன்டிவி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்டம் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது 'நடிகர் சங்க கட்டடம் கட்டும் விவகாரத்தில், அணில்கள் தான் தேவை, யார் ராமர் என்று பார்க்க வேண்டாம்' என அறிவுரை கூறியுள்ளார்.

கமலின் இந்த அறிவுரை மறைமுகமாக அஜித்திற்கு கூறப்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

English summary
Nadigar Sangam: Sources Said Actor Kamal Haasan Indirect Advice to Ajith Regarding Celebrity Cricket Issue.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil