»   »  நடிகர் நகுலுக்கு திருமணம்... சமையல் கலை பட்டதாரியை மணக்கிறார்!

நடிகர் நகுலுக்கு திருமணம்... சமையல் கலை பட்டதாரியை மணக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் காதல் திருமணம் செய்கிறார்.

சமையல் படிப்பில் 'எம்.பி.ஏ.' படித்த பட்டதாரி பெண் அவர். ஆனால் அவரைப் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார் நகுல்.

Nakul's marriage announcement

நடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். மயூர் ஏற்கெனவே காதலித்து திருமணம் செய்தார்.

இளைய தம்பி நகுல், 'காதலில் விழுந்தேன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். 'மாசிலாமணி,' 'கந்த கோட்டை,' 'வல்லினம்' போன்ற படங்களில் நடித்த அவர், மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் நாளை வெளியாகவிருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நகுல், "நான், கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். அவருடைய பெயரை இப்போது வெளியிட விரும்பவில்லை. அந்த பெண் சென்னையை சேர்ந்தவர்தான். 'எம்.பி.ஏ.' படித்து இருக்கிறார்.

எனது நண்பர் ஒருவரின் பக்கத்து வீட்டில் என் காதலி வசித்து வருகிறார். நண்பர் மூலம் அவர் அறிமுகமானார். நட்பு காதலாகி, திருமணத்தில் முடிய இருக்கிறது. எங்கள் காதலை அக்கா தேவயானி உள்பட என் பெற்றோர்களும், காதலியின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்," என்றார்.

English summary
Actor Nakul has announced his love marriage with a MBA graduate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil