»   »  நந்தா படத்தில் குட்டி சூர்யாவாக வந்த பையன் இப்ப ஹீரோவாகிவிட்டார்

நந்தா படத்தில் குட்டி சூர்யாவாக வந்த பையன் இப்ப ஹீரோவாகிவிட்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
குட்டி பையன் சூர்யா இன்று ஹீரோ..!!

சென்னை: நந்தா படத்தில் சிறுவயது சூர்யாவாக நடித்த சிறுவன் தற்போது ஹீரோவாகிவிட்டார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்தில் சிறு வயது சூர்யாவாக நடித்தவர் வினோத் கிஷன். அது தான் அவர் நடித்த முதல் படம். அதன் பிறகு சமஸ்தானம், சேனா ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர் கிரீடம் படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்தார்.

 வில்லன்

வில்லன்

கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் இளம் வில்லனாக நடிப்பில் மிரட்டியிருந்தார் வினோத் கிஷன். விடியும் முன், ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

 அத்தியாயம் 6

அத்தியாயம் 6

அத்தியாயம் 6 படத்தின் மூலம் ஹீரோ ஆகியுள்ளார் வினோத் கிஷன். இந்த படம் வரும் 23ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆறு குறும்படங்களின் தொகுப்பே அத்தியாயம் 6. ஒவ்வொரு படத்தையும் வேறு வேறு இயக்குனர் இயக்கியுள்ளார்.

 ஹிட்டு

ஹிட்டு

எந்த பேய் படம் வந்தாலும் சரி, திகில் படம் வந்தாலும் சரி தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாகாமல் விட மாட்டார்கள் தமிழ் ரசிகர்கள். இந்நிலையில் அத்தியாயம் 6 ரிலீஸாக உள்ளது.

 பரத் ஜெயந்த்

பரத் ஜெயந்த்

ப்ரெண்ட்ஸ் படத்தில் சிறு வயது விஜய்யாக நடித்த பரத் ஜெயந்த் உதவி இயக்குனராகியுள்ளார், சிறு வயது சூர்யாவாக நடித்த வினோத் கிஷன் ஹீரோவாகிவிட்டார். குட்டீஸ்கள் எல்லாம் படுவேகமாக வளர்ந்துவிட்டார்கள்.

Read This: ப்ரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யா நடித்த பொடியனா இது?: வைரலான போட்டோ

English summary
Vinoth Kishan who acted as young Suriya in the movie Nanda has become a hero in Kollywood. He has become the lead actor in Athiyaayam 6 which is set to hit the screens on february 23rd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil