»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

சக்ஸஸ் படத்தில் அறிமுகமாகி பின்னர் காணாமலேயே போய்விட்ட நந்தனாவுக்கும், அதில்ஹீரோவாக அறிமுகமான ஜூனியர் சிவாஜி துஷ்யத்துக்கும் மீண்டும் பட வாய்ப்புக்கள்கிடைத்துள்ளன.

சக்ஸஸ் படத்தை துஷ்யத்தும், உடன் நடித்த நந்தனா, சோனி-யா அகர்-வா-லும் மிக அதிக அளவில்எதிர்பார்த்தனர்.

பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மகனான துஷ்யந்த், சினிமாவுக்காக படிப்பை விட்டுவிட்டுவந்தார். நந்தனாவோ சில மலையாள சினிமா வாய்ப்புக்களை உதறிவிட்டு வந்தார். ஆனால், படம்அடைந்த தோல்வியால் இருவருமே காணாமல் போயினர்.

நொந்து போன நந்தன சொந்த ஊர் கேரளததுக்கே போய், மலையாளத்தில் சின்னச் சின்னரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால், யா-ரும் எதிர்-பா-ரா-த வகை-யில் சோனி-யாவுக்-கு மட்-டும் லாட்-ட-ரி -அ-டித்-த-து. தமி-ழில்அவ-ருக்-கு தொடர்ந்-து வாய்ப்-புக்கள் கிடைத்-து-விட்-ட-ன.

தோல்-வி-யால் துஷ்யந்தும் மண்டை காயந்து கிடந்தார். மகனை வைத்து சொந்தப்படம் எடுக்க பணம்புரட்டும் வேலயிைல் அப்பா ராம்குமார் முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில், துஷ்யந்தைதூக்கிவிட முன் வந்தார் இந்தியன் தியேட்டர்ஸ் பட அதிபர் கிருஷ்ணகாந்த்.

தனுஷை வைத்து திருடா திருடி படத்தை எடுத்து கோடிகளை அள்ள முடியாமல் அள்ளியகிருஷ்ணகாந்த் வரிசையாக படங்களை எடுத்து வருகிறார்.

அதில் மச்சி என்ற படத்தில் துஷ்யந்தை தைரியமாக ஹீரோவாகப் போட்டிருக்கிறார். துஷ்யத்துக்குநடிப்பு வராதது ஒரு பக்கம் இருந்தாலும், அவருக்கு பிரச்சனையே முடி தான் என்பதை உணர்ந்தடைரக்டர் வசந்த்குமார், ஆள் வைத்து அதை ஒட்ட வெட்டிவிட்டு துஷ்யந்தின் லுக்கையேமாற்றிவிட்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் ஹீரோயின் சுபா புஞ்சா என்பதும், படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானனின் தங்கைரைஹானா இசையமைப்பதும் உங்களுக்குத் தெரிந்தது தான்.

சமீபத்தில் படத்தின இசை வெளியீடு நடந்தது. ரைஹானாவின் இசையில் பாடல்கள் நன்றாகவேவந்திருக்கின்றன. இதனால் படமும் ஓடிவிடும் என்ற நம்பிக்கையோடு நடித்துக் கொண்டிருக்கிறார்துஷ்யந்த்.

இனி நந்தனா கதைக்கு வருவோம்... சக்ஸஸ் தோல்வியால் மலையாளத்தில் நடிக்கப்போய்விட்டாலும் சென்னையில் மேனேஜர் ஒருவரைப் போட்டு சான்ஸ் வேட்டை நடத்தியபடி தான்இருந்தார் நந்தனா. இதன் பலனாக உன்னைக் கண்டேனடி என்ற படம் முதலில் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இப்போது என் முதல் காதல் என்றொரு படத்திலும் இப்போது புக்ஆகியிருக்கிறார்.

உன்னைக் கண்டேனடி படத்தில் புதுமுகமான நவீனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் நந்தனா.கோவை பிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குவது புதுமுக டைரக்டர்விஜய்.

பாடல் காட்சிகளுக்காக லண்டன் போய்விட்டுத் திரும்பியிருக்கிறது இந்த யூனிட். படப்பிடிப்புவேகமாய் நடந்து கொண்டுள்ளது.

என் முதல் காதல் சூட்டிங் மிக விரைவில் தொடங்கப் போகிறதாம். மகிழ்ச்சி பொங்க சொல்கிறார்நந்தனா. இந்த முறை நிச்சயமா தமிழில் சக்ஸஸ் ஆகிடுவேன் என்கிறார் இந்த சேச்சி.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil