»   »  பல்லாண்டு வாழ்க படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நானி!

பல்லாண்டு வாழ்க படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நானி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் புதிதாக தயாராகி வருகின்ற "பல்லாண்டு வாழ்க" என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றார் நடிகர் நானி.

"வெப்பம்" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நானி. இதில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இப்படத்தை அஞ்சனா அலிகான் இயக்கியிருந்தார்.

இப்படம் நானிக்கு தமிழில் சிறந்த அறிமுக படமாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான "நான் ஈ" படம் சூப்பர் ஹிட்டானது.

தெலுங்கில் படு பிசி:

தெலுங்கில் படு பிசி:

தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துவரும் நானி, தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய அஞ்சனா அலிகான் இயக்கி வரும் "பல்லாண்டு வாழ்க" படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நாயகன் நாயகி:

நாயகன் நாயகி:

"பல்லாண்டு வாழ்க" படத்தில் ராகுல் ரவீந்திரன் நாயகனாகவும், சாந்தினி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

சிறப்புத் தோற்றத்தில் நானி:

சிறப்புத் தோற்றத்தில் நானி:

நானி நடித்தது பற்றி படத்தின் நாயகன் ராகுல் ரவீந்திரன் கூறும்போது, "பல்லாண்டு வாழ்க" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நானி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இயக்குனர் அஞ்சலி அலிகான்:

இயக்குனர் அஞ்சலி அலிகான்:

இதற்காக கடந்த இரண்டு நாட்களாக படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார். நானி ஏற்கனவே வெப்பம் படத்தில் அஞ்சனா அலிகானுடன் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது.

மிகவும் சந்தோஷம்:

மிகவும் சந்தோஷம்:

இரண்டு பேரும் நல்ல நட்பை பரிமாறிக் கொண்டனர். நானி படப்பிடிப்பில் கலந்து கொண்டது சந்தோஷமாக இருந்தது. இவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் நிறைவடையும் என்றார்.

சிறப்புத் தோற்றத்தில்:

சிறப்புத் தோற்றத்தில்:

நானி ஏற்கனவே "நீதானே என் பொன்வசந்தம்", "நிமிர்ந்து நில்" ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Nani acting as a special character in a Tamil Film named “Pallandu vazhka” for the director Anjali alikhan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil