»   »  தொகுப்பை பிடித்த நரேன்

தொகுப்பை பிடித்த நரேன்

Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் சில படங்களும், தமிழில் ஒரு படமும் முடித்துள்ள நரேன், விரைவில் கல்யாணம் செய்து கொண்டு குடும்பஸ்தன் ஆகப் போகிறார்.

சித்திரம் பேசுதடி மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாளத்து நரேன். ஒரே படத்தில் ஹிட் ஆகிப் போன நரேன், அதற்குப் பிறகு தன்னைத் தேடி வந்த தமிழ்ப் பட வாய்ப்புகளையெல்லாம் நிராகரித்துக் கொண்டே வந்தார்.

ஏன் என்று கேட்டவர்களிடம், நமக்கேத்த கதையா ஒண்ணுமே வரலை, தமிழ் சினிமாக்காரங்களுக்கு நல்ல கதையைக் கூட பிடிக்க முடியலை என்று ரொம்ப அலுத்துக் கொண்டு பதில் பேசினார்.

தம்பியின் தம்பட்டத்தைப் பார்த்த சிலர் நரேனை அணுகி, தம்பி இப்படியே இருந்தா ஊத்தி மூடி ஊருக்கு அனுப்பிருவாங்க, வர்ற படங்களை ஒத்துக் கொண்டு உருப்படுற வழியப் பாருப்பா, இல்லாட்டி ஊறுகாய் கூட கிடைக்காது என்று அட்வைஸ் செய்யவே, சுதாரித்துக் கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்தார்.

தற்போது, தங்கர்பச்சானின் இயக்கத்தில் உருவாகி வரும் பள்ளிக்கூடத்தில் கலெக்டர் வேடத்தில் நடிக்கிறாராம் நரேன். இந்தப் படத்தில் நடிப்பதோடு மலையாளப் படங்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார். தற்போது கைவசம் ஒரே கடல் என்ற மலையாளப் படம் உள்ளதாம்.

இப்படியாக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் நரேனுக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. மணப்பெண், கோழிக்கோைடச் சேர்ந்த மஞ்சு ஹரிதாஸ். 25ம் தேதி நிச்சயதார்த்தமாம்.

அழகான மஞ்சு, அம்ரிதா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கிறார். அப்படியே கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படித்து வருகிறாராம். இதை விட முக்கியமாக, சித்திரம் பேசுதடி படத்தில் மஞ்சுவின் குரலும் இடம் பெற்றுள்ளது. எங்கேன்னு தெரியுமா?. இது என்ன புதுக் கனவோ என்ற பாடலைப் பாடியவரே மஞ்சுதான்!.

அப்ப இது காதல் கல்யாணமா என்று நரேனிடம் கேட்டால் அப்படியும் எடுத்துக்கலாம் என்று என்னென்னவோ பேசுகிறார்.

நல்லாருந்தா சரித்தான்!

Please Wait while comments are loading...