»   »  நரேன் கல்யாணம் நடந்தது

நரேன் கல்யாணம் நடந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சித்திரம் பேசுதடி நாயன் நரேனுக்கும், மஞ்சுவுக்கும் கோழிக்கோட்டில் கல்யாணம் நடந்தேறியது.


மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள நரேன், சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழிலும் வெற்றி நாயகனாக மாறினார். தொடர்ந்து பள்ளிக்கூடம் படத்திலும் அவர் சிறப்பாக நடித்தார்.

இந்த நிலையில் அவருக்கும், அவரது நீண்ட நாள் காதலியான மஞ்சுவுக்கும் திருமணம் நிச்சயமானது. அவர்களது திருமணம் நேற்று கோழிக்கோட்டில் உள்ளி சிவாலயத்தில் நடந்தது.


விமரிசையாக நடந்த இந்த திருமணத்தில் மஞ்சு கழுத்தில் தாலி கட்டி காதலியை மனைவியாக்கினார் நரேன். திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை ஜி.ஆர்.டி. கிராண்ட் டேஸ் ஹோட்டலில் செப்டம்பர் 1ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் நரேன். இதில் தமிழ்த் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil