»   »  நரேன்-மஞ்சு காதல் கல்யாணம்!

நரேன்-மஞ்சு காதல் கல்யாணம்!

Subscribe to Oneindia Tamil

சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், தான் ரகசியமாக காதலித்து வந்த மலையாளப் பெண் மஞ்சுவை வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேரளாவில் கைப்பிடிக்கிறார்.

சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், தான் ரகசியமாக காதலித்து வந்த மலையாளப் பெண் மஞ்சுவை வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேரளாவில் கைப்பிடிக்கிறார்.

காதலும், பொய்யும் பிரிக்க முடியாதவை. காதலிப்பார்கள், ஆனால் கேட்டால், சேச்சே, நானெல்லாம் ரொம்ப நல்ல புள்ளையப்பா என்று மழுப்பி விடுவார்கள். சாதா ஜனங்களே இப்படி என்றால் சினிமாக்கார்ரகள் எப்படி இருப்பார்கள்.

சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்த காலத்தில், காதலா, அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று சூர்யா வம்பாடு பட்டு பொய் சொல்லி வந்தார். ஆனால் கடைசியில் உண்மை வெளியே வரவே, நெசம்தான் என்று ஒத்துக் கொண்டார், சந்தோஷமாக ஜோதிகாவைக் கைப்பிடித்தார்.

லேட்டஸ்டாக இப்படிப்பட்ட பொய் சொல்லி கடைசியில் சிக்கியவர் ஸ்ரீகாந்த். வந்தனாவுக்கும், அவருக்கும் கல்யாணம் என்று திடீரென செய்தி வந்தது. நோண்டிப் பார்த்தால் இருவரும் காதலர்கள் என்று தெரிய வந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை என்று முதலில் மறுத்தார் ஸ்ரீகாந்த். ஆனால் அப்புறம் ஒத்துக் கொண்டார்.

சமீபத்தில் அலைபாயுதே ஸ்டைலில் கல்யாணமும் செய்து கொண்டவர்கள் என்ற இன்னொரு மாபெரும் உண்மையும் வெளியே வந்து அத்தனை பேரையும் விதிர்க்க வைத்தது.

அதேபோலத்தான் சித்திரம் பேசுதடி நாயகன் நரேனும், கேரளாவைச் தேர்ந்த மஞ்சு என்ற பெண்ணும் தீவிரமாக காதலிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இதை உடனடியாக மறுத்தார் நரேன். சான்ஸே இல்லை, நான் யாரையும் காதலிக்கவில்லை, மஞ்சு என்ற பெயரையே கேள்விப்பட்டதில்லை என்று வடக்கும் தெற்குமாக மண்டையை ஆட்டி மறுத்தார்.

மீடியாக்களுக்குப் பேட்டி கொடுப்பவர்கள் பொய் சொல்லலாம், ஆனால் பெரும்பாலும் மீடியாக்கள் பொய் சொல்வதில்லை. அதிலும் மோப்பம் பிடித்து செய்திகளை லீக் செய்வதில் அவர்கள்தான் கில்லாடிகளாச்சே. மஞ்சு, நரேன் காதல் செய்தி உண்மைதான் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.

எந்த மஞ்சுவைத் தெரியாது என்று நரேன் சொன்னாரோ அதே மஞ்சுவை வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேரளாவில் வைத்து மணக்கவுள்ளார் நரேன்.

இது பக்கா காதல் திருமணம் என்றும் நரேனே தனது திருவாயால் ஒப்புக் கொள்ளவும் செய்துள்ளார். செப்டம்பர் 9ம் தேதி சென்னையில் ரிசப்ஷனும் வைத்துள்ளாராம் நரேன்.

மலையாளத்திலும், தமிழிலும் கை நிறையப் படங்களுடன் உள்ளார் நரேன். தமிழில் அவர் நடித்துள்ள பள்ளிக்கூடம் விரைவில் ரிலீஸாகப் போகிறது. அடுத்து, சித்திரம் பேசுதடி இயக்குநர் மிஷ்கினின் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார் நரேன்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil