»   »  2 ரூபாய்க்காக திருமண வீடுகளில் டான்ஸ் ஆடிய பிரபல நடிகர்

2 ரூபாய்க்காக திருமண வீடுகளில் டான்ஸ் ஆடிய பிரபல நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிறு வயதில் கையில் காசு இல்லாமல் திருமண வீடுகளில் நடனம் ஆடியதாக பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தெரிவித்துள்ளார்.

கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுத்துவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளவர் பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி. அவர் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் ஆகிய மூன்று முக்கிய கான்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறியதாவது,

திருமணம்

திருமணம்

சிறுவனாக இருந்தபோது நான் என் நண்பர்களுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளேன். நாங்கள் நடனமாடியதை பார்த்து மக்கள் எங்களை நோக்கி பணத்தை வீசுவார்கள்.

2 ரூபாய்

2 ரூபாய்

பணத்திற்காக நானும், என் நண்பர்களும் எங்கள் பகுதியில் எந்த வீட்டில் திருமணம் நடந்தாலும் போய் நடனம் ஆடுவோம். நாள் இறுதியில் இரண்டு அல்லது மூன்று ரூபாய் கிடைக்கும். அப்போது அது பெரிய தொகை ஆகும்.

நடனம்

நடனம்

படங்களில் நடனமாடுவது எனக்கு வராது. அதனால் ஒதுங்கியே இருப்பேன். ஆனால் டைகர் ஷ்ராபுடன் நான் நடிக்கும் முன்னா மைக்கேல் படத்தில் நடனம் ஆட வேண்டும் என்று இயக்குனர் சபீர் கான் என்னிடம் கூறியதும் முடியாது என்றேன்.

டைகர் ஷ்ராப்

டைகர் ஷ்ராப்

சபீர் கான் வலியுறுத்தலால் முன்னா மைக்கேல் படத்தில் நடனம் ஆடுகிறேன். எனக்கு மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். எங்கள் காலத்தில் அவரை போன்று யாரும் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை என்றார் நவாஸ்.

English summary
Bollywood actor Nawazuddin Siddiqui admits that though dance has never been his forte, he used to shake his legs at weddings to collect money as a kid.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil