»   »  நெருப்புடா, தல டா, தளபதி டா, தனுஷ் டா: என்ன புரியலையா?

நெருப்புடா, தல டா, தளபதி டா, தனுஷ் டா: என்ன புரியலையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடல் டீஸர் போன்று அஜீத், விஜய், தனுஷ் ரசிகர்களும் ஒரு நெருப்புடா பாடல் டீஸரை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தில் வரும் நெருப்புடா நெருங்குடா முடியுமா பாடல் டீஸர் இணையதளத்தை கலக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை நெருப்புடா பாடலை தான் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நெருப்புடா பாடல் டீஸர் புதிய சாதனையே படைத்துள்ளது.

அஜீத்

அஜீத் ரசிகர்கள் தங்கள் தல நெருப்புடா பாடலில் வந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து அவர்கள் ஒரு டீஸரை வெளியிட்டுள்ளனர்.

விஜய்

இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அவரை வைத்து ஒரு நெருப்புடா டீஸரை வெளியிட்டுள்ளனர். ரஜினியின் நெருப்புடா டீஸரை விட தாங்கள் வெளியிட்ட டீஸர் தான் அருமையாக உள்ளது என்று பெருமையாக தெரிவித்துள்ளனர்.

தனுஷ்

தனுஷ் ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?. அவர்கள் பங்கிற்கு தனுஷை வைத்து ஒரு நெருப்புடா பாடல் டீஸரை வெளியிட்டுள்ளனர்.

ரஜினி

எத்தனை பேர் வேண்டுமானாலும் நெருப்புடா பாடலுக்கு அவர்களுக்கு பிடித்த ஹீரோக்களை வைத்து டீஸரை வெளியிடட்டும். அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஏன் என்றால் யார் வந்தாலும் எங்கள் சூப்பர் ஸ்டாரை அடுச்சுக்க முடியாது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

English summary
Ajith, Vijay and Dhanush fans have released Neruppu da song teaser with their favourites.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil