சிம்புவின் 'நயன்' சென்டிமென்ட் ... இதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா

சென்னை : தயாரிப்பாளர்களுடனான பிரச்சனைகளுக்கு பிறகு சில ஆண்டுகள் சிம்பு நடிக்காமல் இருந்தாலும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். குடி பழக்கம் போன்றவற்றை விட்டு, கடினமாக ஒர்க் அவுட் செய்து, ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார் சிம்பு.

மாநாடு படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு. முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் டைட்டில் தற்போது வெந்து தணிந்தது காடு என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் ஃபஸ்ட்லுக் போஸ்டர் ஆகஸ்ட் 6 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். புதிதாக டைட்டில் மாற்றப்பட்ட இந்த படத்தின் போஸ்டர் பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கிராமத்து கெட் அப்பில், ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் சிம்பு.

3 வயதில் ஜெசிக்காவுக்கு இப்படி ஒரு நோய்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்

சிம்புவின் 9 சென்டிமென்ட்

சிம்புவின் 9 சென்டிமென்ட்

சிம்புவின் புது பட அறிவிப்புக்கள் வெளியிடப்படும் நேரத்தை வைத்து பெரிய ஆராய்ச்சியே செய்துள்ளனர் நெட்டிசன்கள். சிம்பு தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் ஒன்பது என்ற சென்டிமென்ட்டை விடாப்பிடியாக கடைபிடித்து வருவதை பட்டியலிட்டுள்ளனர். சிம்பு முதன் முதலில் ஹீரோவாக நடித்த காதல் அழிவதில்லை படத்தில் அவரது அப்பா டி.ராஜேந்திரன் துவக்கி வைத்ததை இன்னும் கடைப்பிடித்து வருகிறார் சிம்பு.

எல்லாமே ஒன்பது தானா

எல்லாமே ஒன்பது தானா

வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட்லுக் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன் கூட்டுத்தொகை 9. இதே போல் மாநாடு டீசர் வெளியிடப்பட்ட காலை 5.04 மணிக்கு, மாநாடு ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது காலை 10.44 க்கு. மாநாடு லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது மாலை 4.50 மணிக்கு.

இதுல இவ்வளவு இருக்கா

இதுல இவ்வளவு இருக்கா

சிம்புவின் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கப்பட்டதும் காலை 9.09 மணிக்கு தான். ஈஸ்வரன் படத்திற்காக Am coming back வீடியோ வெளியிடப்பட்டதும் காலை 9.09 மணிக்கு. ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டதும் காலை 4.32 மணிக்கு என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

நயனை மறக்க முடியலையா

நயனை மறக்க முடியலையா

இன்னும் சிலர், சிம்புவால் தனது முன்னாள் காதலி நயன்தாராவை மறக்க முடியவில்லை போல அதனால் தான் நயன் நம்பரை விடாமல் கடைபிடித்து வருகிறார் என மீம்ஸ் கூட பதிவிட்டுள்ளனர்.

இவரு தான் காரணமா

இவரு தான் காரணமா

சிம்பு இப்படி நயன் சென்டிமென்ட்டை விடாமல் கடைபிடிக்க காரணம் என்ன என விசாரித்தால், அது டிஆர் துவங்கி வைத்ததாம். ராசிப்படி 9 லக்கி என டிஆர் துவங்கி வைத்ததை தான் சிம்பு இப்போது வரை கடைபிடித்து வருகிறாராம்.

சிம்பு வசம் பல படங்கள்

சிம்பு வசம் பல படங்கள்

சிம்பு தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். மஹா, மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர மேலும் சில படங்களில் நடிக்க சிம்புவிடம் பேசப்பட்டு வருகிறதாம்.

Recommended Video

MAANAADU - இதுவரைக்கும் பார்க்காத SIMBU | DIRECTOR VENKATPRABHU EXCLUSIVE | FILMIBEAT TAMIL
தயாரிப்பாளர்களை ஈர்க்கும் சிம்பு

தயாரிப்பாளர்களை ஈர்க்கும் சிம்பு

சிம்பு தற்போது சரியான நேரத்திற்கு ஷுட்டிங்கிற்கு வருவது, குடிபழக்கம் இல்லாமல் இருப்பது போன்று பல வகையிலும் நிறையவே மாறி உள்ளதால் பல தயாரிப்பாளர்களின் கவனம் சிம்பு பக்கம் திரும்பி உள்ளதாம். அது தான் வரிசையாக பல படங்கள் அவர் வசம் வந்து கொண்டிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X