For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னது...உங்க படத்த நீங்களே பார்த்தது இல்லையா...அப்போ நாங்க தான் சிக்கிட்டோமா ?

  |

  சென்னை : இன்று தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்திய அளவில் பிஸியான நடிகராக இருந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. விஜய குருநாத சேதுபதி காளிமுத்து என்ற பெயரை சினிமாவிற்காக விஜய் சேதுபதி என மாற்றிக் கொண்டார். துபாயில் வேலை பார்த்து விட்டு, என்ஆர்ஐ.,யாக இந்தியா வந்த விஜய் சேதுபதி, பல நிறுவனங்களில் வேலை பார்த்தார்.

  Netizens trolls Vijay Sethupathis old interview video

  சினிமா மீது கொண்ட ஆசையால் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் கோகுலத்தில் சீதை, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, வெண்ணிலா கபடிக்குழு போன்ற பல படங்களில் முகம் தெரியாத கேரக்டர்களில் 5 ஆண்டுகள் நடித்தார். அதற்கு பிறகு தான் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் விஜய் சேதுபதி.

  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்து பேசப்படும் நடிகரான விஜய் சேதுபதி, பிறகு வளர்ந்து டாப் ஹீரோ ஆனார். ஹீரோவாக நடிக்கும் போதே வயதான ரோலில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்தார். விக்ரம் வேதா படத்தில் வில்லத்தனமான கேரக்டரில் நடித்தார். மறுபடியும் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வந்தார்.

  வித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்!வித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்!

  அடடே...வித்தியாசமாக பல படங்களை தேர்வு செய்து நடிக்கிறாரே என அனைவரும் அவரை கொண்டாட துவங்கிய சமயத்தில் மொழி, கேரக்டர் என எதையும் பார்க்காமல் கிடைக்கும் ரோல்களில் எல்லாம் நடித்து வருகிறார். தற்போது மட்டும் கிட்டதட்ட 20 படங்களில் நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட் படம் முதல் சிறிய ரோல் வரை நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. நினைவில் வைத்து கொள்ள முடியாத அளவிற்கு படங்களில் நடித்து வருகிறார்.

  இதை வைத்து சமீபத்தில் ட்விட்டரில் மீம்ஸ் உருவாக்கி அவரது ரசிகர்களே விஜய் சேதுபதியை கலாய்த்து வந்தனர். தியேட்டர், டிவி, ஓடிடி என எங்கு சென்றாலும் விஜய் சேதுபதி படங்கள், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாகவே உள்ளது. இப்படி இருந்தால் எங்களுக்கு போர் அடிக்காதா என பலர் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி தரப்பில் எந்த பதிலும் இல்லை.

  இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி அளித்த பழைய பேட்டி வீடியோவை வடிவேலு காமெடியுடன் இணைத்து புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

  Annabele Sethupath Movie Review | Poster Pakiri | Filmibeat Tamil

  அந்த பேட்டியில் பத்திரிக்கையாளர், நீங்கள் நடிக்கும் படங்களை நீங்கள் பார்ப்பதுண்டா என கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் விஜய் சேதுபதி பதறிப் போய், இல்லை என்றார். மேலும் ஆரம்பத்தில் பார்த்தேன். இப்போது பார்ப்பது இல்லை. பல படங்களை நான் பாதிக்கு மேல் பார்த்ததே இல்லை என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

  இதற்கு பலரும், நீங்களே உங்க படத்தை பார்க்கவில்லை என்றால், நாங்க எப்படி பார்ப்போம். அவருக்கே போர் அடிச்சுடுச்சு போல, முழுசா பாத்திருந்தா செத்திருப்ப என வடிவேலு டையலாக்குகளை விதவிதமாக இணைத்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர். விஜய் சேதுபதி ஏன் இவ்வளவு இறங்கிப் போய், கிடைக்கிற ரோல்களில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார் என சளிப்பாக கேட்டு வரும் நிலையில், இந்த வீடியோ வெளியாகி டிரெண்ட் ஆகி உள்ளது.

  English summary
  netizens troll vijay sethupathi's old interview video. on that video vjs said that he didn't saw his films. netizens combine vadivelu comedy scenes in this vjs interview and goes viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X