»   »  'அடிக்க' வரும் நிதீன் சத்யா!

'அடிக்க' வரும் நிதீன் சத்யா!

Subscribe to Oneindia Tamil


சென்னை 600028 படத்தில் அசத்தலாக நடித்துப் பெயர் வாங்கி, சத்தம் போடாதே படத்தில் சைக்கோ கணவராக வந்து கலக்கிய நிதீன் சத்யா அடுத்து அதிரடி நாயகனாக அவதாரம் எடுக்கிறார்.

நிதீன் சத்யா நடித்த முதல் படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் நிதீன். அவருக்கு ஆறுதல் சொல்லி ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா என்று கமல் அண்ட் கோ பாட்டுப் பாடி காதல் போயின் 'நோ' சாதல் - 'பட்' இன்னொரு காதல்! என அட்வைஸ் செய்து ஆறுதல் கூறுவார்கள்.

அதன் பின்னர் அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்திருந்தார் நிதீன் சத்யா. ஆனால் அவருக்குப் பிரேக் கொடுத்தது சென்னை 600028 படம்தான். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த சத்தம் போடாதே படத்தில் பத்மப்ரியாவின் முதல் கணவராக, சைக்கோ கணவராக வந்து கலக்கியிருந்தார் நிதீன்.

இப்போது நிதீன் ஒரு பிசியான நடிகர். சேரனுடன் ராமன் தேடிய சீதை, தோழா என சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு நிதீனுக்குக் கிடைத்துள்ளதாம். கெளதம் மேனனின் உதவியாளற் மணிகண்டன்தான் இந்த புரமோஷனைக் கொடுத்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த புதுமுகம் இப்படத்தில் நிதீனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

அதேபோல நடிகை சுஜிதாவின் அண்ணனும், தமிழில் குழந்ைத நடிகராக நிறையப் படங்களில் நடித்தவரும், தற்போது தெலுங்கில் சூர்யகிரண் என்ற பெயரில் இயக்குநராக விளங்கும் மாஸ்டர் சுரேஷ் இயக்கும் முதல் தமிழ்ப் படத்திலும் நிதீன் ஹீரோவாக நடிக்கிறாராம்.

அதிரடி வேடத்தில் தனது முதல் ஹீரோ படத்தில் நடிக்கவுள்ள நிதீன் இனிமேல் துண்டு துக்கடா ரோலில் நடிக்க மாட்டாரம். ஹீரோவாக புரமோஷன் கிடைத்தாகி விட்டது. கீழே இறங்கி வரமுடியாத என்கிறார் சிரித்துக் கொண்டே.

கலக்குங்கண்ணா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil