»   »  நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ்ப் படம்... தூத்துக்குடியில் தொடங்கியது!

நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ்ப் படம்... தூத்துக்குடியில் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிவின் பாலி... மலையாளத்தில் செம க்ரேஸ் இவருக்கு. இளம் பெண்களின் கனவு நாயகன். அங்குள்ள மீடியாக்கள் இவரை மம்முட்டி, மோகன் லாலுக்கு இணையாக வைத்து எழுதிக் கொண்டிருக்கின்றன.

2010-ல் நடிக்க வந்தவர், 2013-ல்தான் தமிழில் அறிமுகமானார். முதல் படம் நேரம். ஆனால் அது இரு மொழிப் படம். தமிழில் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும் வணிக ரீதியாக சரியாகப் போகவில்லை.

கன்னட ரீமேக்

கன்னட ரீமேக்

இப்போது முதல் முறையாக நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார். இது கன்னடத்தில் பெரும் வெற்றிப் பெற்ற 'உலிதவரு கண்டந்தே' என்ற படத்தின் ரீமேக்.

இந்தப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவரும் கன்னட நடிகைதான். பெயர் ஸ்ரத்தா ஸ்ரீனி.

இன்று தொடக்கம்

இன்று தொடக்கம்

கவுதம் ராமச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. இந்தப் படத்துக்குப் பிறகு, இன்னொரு தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். அதன் தயாரிப்பாளர் அட்லீ.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

மலையாளத்தில் நிவின் பாலி நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வரும் நிவின், திடீரென தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது கேரள திரையுலகினருக்கே ஆச்சர்யமான விஷயம்தான்.

தமிழ் மார்க்கெட்

தமிழ் மார்க்கெட்

இதுகுறித்து பேட்டியொன்றில் நவீன் இப்படிக் கூறியுள்ளார்: "என்னதான் மலையாளத்தில் டாப் ஹீரோ என்றாலும், தமிழில் ஒரு இடத்தைப் பிடிப்பது முக்கியம். தமிழ், மலையாளம் என இரட்டை சவாரி நோக்கமல்ல. தமிழ் மார்க்கெட் பெரியது, எனவே அங்கும் வெற்றி பெற விரும்புகிறேன்."

உடைப்பாரா?

உடைப்பாரா?

பொதுவாக கேரள ஹீரோக்களை விட, ஹீரோயின்களுக்குத்தான் தமிழகத்தில் வரவேற்பு அதிகம். அந்த ட்ரெண்டை உடைப்பாரா நிவின்? பார்க்கலாம்!

English summary
Malayalam cinema's top hero Nivin Pauly has started shooting for his first Tamil film, directed by Gautam Ramachandran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil