»   »  இனிமேல் நான் நல்லவன் - சிம்பு

இனிமேல் நான் நல்லவன் - சிம்பு

Subscribe to Oneindia Tamil
Simbu
இனிமேல் நான் கெட்டவனாகவோ, பெண்களை மோசமாக சித்தரிக்கும் கதைகள் உள்ள படங்களிலோ நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

கெட்டவன் படம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் காளை படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. புதிதாக சிலம்பாட்டம் படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் புதிய முடிவை எடுத்துள்ளார் சிம்பு. அது இனிமேல் தான் நடிக்கும் படங்களில் சமூகத்திற்குத் தேவையான மெசேஜ் இருக்குமாம். மேலும் பெண்களை மோசமாக சித்தரிக்கும், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் கேரக்டர் போன்றவற்றில் நடிக்க மாட்டாராம் சிம்பு.

சிலம்பாட்டம் குறித்து சிம்பு கூறுகையில், சிலம்பாட்டம் படத்தில் ரொம்ப அமைதியான, மென்மையான கேரக்டரில் நடிக்கிறேன். சாந்தமாக இருக்கும் இளைஞன் எப்படி ஆக்ரோஷமாக வெகுண்டு எழுகிறான் என்பது தான் கதை.

இந்த கதையை இயக்குனர் சரவணனிடம் கேட்பதற்கே அவரை இழுத்தடித்து விட்டேன். இப்போது அடடா.. ரொம்ப தப்பு பண்ணிட்டோமே என்று ஃபீல் பண்ணுகிறேன். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை சிலம்பாட்டம்.

இனிமேல் நான் எந்த படத்திலும் கெட்டவனாக நடிக்கப் போவதில்லை. பெண்களை மோசமாக சித்தரித்து காட்டும் கதை கொண்ட படத்தில் நடிக்கப் போவதில்லை.

முன்பு இளைஞர்களுக்காக படம் பண்ணினேன். ஆனால் இப்போதெல்லாம் என்னுடைய நடிப்பு தாய்க்குலங்களையும்,
குழந்தைகளையும் போய் சேர வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம் என்றார் சிம்பு.

தட்ஸ்குட்!

Please Wait while comments are loading...