»   »  இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி

இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்.எல்.ஏ.க்களை அவர்களின் இடங்களுக்கு சென்று பணியை துவங்கச் சொல்லுங்கள் என நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.

19 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிமன்றம் அவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த 3 பேரும் பெங்களூரில் வழக்கு நடந்த நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். பின்னர் அவர்கள் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுவார்கள்.

கனவு

கனவு

தமிழக முதல்வராகத் துடித்த சசிகலாவின் கனவு தவிடிபொடியாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்ததும் வீணாகிவிட்டது.

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி

சசிகலா முதல்வராகத் துடித்தது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்தது குறித்து நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவர் தீர்ப்பு குறித்தும் ட்வீட்டியுள்ளார்.

கொண்டாட்டம்

இரண்டு பக்கத்தினரும் கொண்டாடத் தேவையில்லை. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அது என்ன கூறுகிறது என்பதை நினைத்துப் பார்க்கவும் என தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.

எம்.எல்.ஏ.க்கள்

தற்போது அவரவர் இடங்களுக்கு திரும்பிச் சென்று வேலையை துவங்குமாறு எம்.எல்.ஏ.க்களை கேட்டுக் கொள்ளவும் என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி.

English summary
Actor Arvind Swami tweeted that, 'Now, Please ask the MLAs to get back to civilisation and start working.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil