»   »  தமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்! - நடிகர் பிரபு

தமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்! - நடிகர் பிரபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக - கர்நாடக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில விஷமிகள்தான் இந்த விஷயத்தை பிரச்சினையாக்குகிறார்கள் என்றார் நடிகர் பிரபு.

கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரபு நிருபர்களிடம் பேசுகையில், "காவிரிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

No problem between Tamils and Kannad people, says Prabhu

இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படுகிறது. அதன் வழியில் நடிகர் சங்கம் செல்லும்.

தமிழக, கர்நாடக மக்களிடையே எந்த மோதலும் இல்லை. கர்நாடக மக்கள் காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு காட்டவில்லை. தமிழக விவசாயிகளின் கஷ்டம் கன்னட விவசாயிகளுக்குப் புரியும்.

ஆனால் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள்தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ஒரு சில அமைப்புகள் இதை அரசியலாக்குகின்றன.

காவிரி விவகாரத்தை அரசியலாக்க கூடாது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்பட வேண்டும்," என்றார்.

English summary
Actor Prabhu says that some of the bad elements made the entire Cauvery issue to violent.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X