»   »  தனுஷுடன் மோதலா?- சிவகார்த்திகேயன் விளக்கம்

தனுஷுடன் மோதலா?- சிவகார்த்திகேயன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷுடன் எந்த மோதலும் இல்லை.. நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனை பெரிய திரையில் அறிமுகப்படுத்தியவர் தனுஷ். 3 படத்தில்தான் முதல் அவர் நடித்தார். தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாத நேரத்தில் எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக்கினார்.

அதிலிருந்து சிவகார்த்திகேயனுக்கு ஏறுமுகம்தான். இப்போது அதே சிவகார்த்திகேயனை வைத்து காக்கிச் சட்டை படத்தைத் தயாரித்துள்ளார் தனுஷ்.

மோதலா?

மோதலா?

இந்த நிலையில் காக்கி சட்டை படத்தின் புரமோஷன்களில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்றும், தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின. இதனை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார்.

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. பட புரமோஷன்களில் அவர் கலந்து கொள்ளாததற்கு வேறு காரணம் உள்ளது.

நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள்..

நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள்..

முதலில் எங்களை தூக்கி விட தனுஷ் வந்தார். தற்போது நாங்கள் வளர்ந்து விட்டதால், உங்களை நீங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி கலந்துக் கொள்ளவில்லை' என்றார்.

டிவி நிகழ்ச்சியில்..

டிவி நிகழ்ச்சியில்..

ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் வெளியேறிவிட்டார். இது அவர்களுக்குள் பிரச்சினை என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக அரங்குகளில்

அதிக அரங்குகளில்

காக்கி சட்டை படம் பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ளது. உலகெங்கும் 600-க்கும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர்.

English summary
Actor Sivakarthikeyan has denied any rift between him and Dhanush.
Please Wait while comments are loading...