»   »  எனக்கெல்லாம் அந்தத் தகுதியே கிடையாதுங்க... "பளிச்" மாதவன்

எனக்கெல்லாம் அந்தத் தகுதியே கிடையாதுங்க... "பளிச்" மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. அதற்குரிய தகுதி இருந்தால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அரசியலுக்கு வரலாம். என்னை பொறுத்தவரை அதற்கான தகுதி இல்லை என்று நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் மாதவன்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு மாதவன் இறுதிச் சுற்று என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.


சுதா இயக்கியுள்ள இப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.


சிறப்புப் பயிற்சி...

சிறப்புப் பயிற்சி...

இந்தப் படத்திற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் அமெரிக்கா சென்று பயிற்சி பெற்றுள்ளார் மாதவன். அதோடு உணவுகள் மூலம் எடையையும் அவர் அதிகரித்துள்ளார். இந்த படம், தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் 44 நாட்களில் எடுக்கப் பட்டுள்ளது.


தமிழ் சினிமா...

தமிழ் சினிமா...

இந்நிலையில், நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மாதவன், ‘தற்போது தமிழ் சினிமா ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாக' பாராட்டியுள்ளார்.


திறமைசாலிகள்...

திறமைசாலிகள்...

அதோடு, புதுமுக இயக்குனர்கள், நடிகர்கள் வரவு தமிழ் சினிமாவை தனித்தன்மையுடன் கொண்டு செல்ல வைக்கிறது. அவர்கள் திறமைசாலிகளாக உள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் சர்வதேச தரத்துக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்' என அவர் தெரிவித்துள்ளார்.


அரசியல் பிரவேசம்...

அரசியல் பிரவேசம்...

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தான கேள்விக்கு, "நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. அதற்குரிய தகுதி இருந்தால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அரசியலுக்கு வரலாம். என்னை பொறுத்தவரை அதற்கான தகுதி இல்லை என்று நினைக்கிறேன்" என மாதவன் பதிலளித்துள்ளார்.


ரஜினி-கமல்..

ரஜினி-கமல்..

மேலும், ‘கமல்-ரஜினி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும். அவர்கள் மிகப்பெரிய கலைஞர்கள். அவர்கள் இணைந்து நடிக்கும் படம் வசூலில் அமோக சாதனை படைக்கும்' என தன் ஆசையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


English summary
Actor Madhavan has said that he is not interested in politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil