»   »  தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வதில் தப்பே இல்லை: மணிரத்னம் ஹீரோ

தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வதில் தப்பே இல்லை: மணிரத்னம் ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லிவ் இன் முறைப்படி வாழ்வதில் தவறு எதுவும் இல்லை என்று ஓகே ஜானு பட ஹீரோ ஆதித்யா ராய் கபூர் தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் ஓகே கண்மணி படம் இந்தியில் ஓகே ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் ஆதித்யா ராய் கபூரும், நித்யா மேனன் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூரும் நடித்துள்ளனர்.

மணிரத்னம் தயாரித்துள்ள இந்த படம் வரும் 13ம் தேதி ரிலீஸாகிறது.

லிவ் இன் முறை

லிவ் இன் முறை

லிவ் இன் முறைப்படி வாழ்வது தற்போது சர்வ சாதாரணம். அதனால் தான் பல படங்களில் லிவ் இன் முறையை காட்டுகிறார்கள். என் நண்பர்களில் பலர் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள் என ஆதித்யா தெரிவித்துள்ளார்.

தப்பு இல்லை

தப்பு இல்லை

லிவ் இன் முறை வாழ்க்கை சிலருக்கு ஒர்க்அவுட் ஆகிறது, சிலருக்கு ஆவது இல்லை. ஆனால் லிவ் இன் முறை வாழ்க்கையில் தவறு எதுவும் இல்லை. இது மோசமான விஷயமும் இல்லை என்கிறார் ஆதித்யா.

தம்பதி

தம்பதி

ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள லிவ் இன் முறைப்படி சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை. ஓகே ஜானு படம் லிவ் இன் முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்று ஆதித்யா கூறியுள்ளார்.

ஓகே ஜானு

ஓகே ஜானு

ஓகே ஜானு லிவ் இன் முறை பற்றி மட்டும் அல்ல. இது ஒரு காதல் கதை. இது தவறு, இது சரி என்று நாங்கள் யாருக்கும் பாடம் எடுக்கவில்லை. ஒரு ஜோடிக்கு இடையேயான காதல் உறவை அழகாக காட்டியுள்ளனர் என ஆதித்யா தெரிவித்துள்ளார்.

English summary
OK Jaanu hero Aditya Roy Kapoor said that there is nothing wrong in live-in-relationship.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil