»   »  ஸ்னேகா-கரணின் 'காளி'

ஸ்னேகா-கரணின் 'காளி'

Subscribe to Oneindia Tamil
Click here for more images

ரஜினி நடித்த பழைய திரைப்படமான காளி பெயரில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது. இதில் நடிக்கப் போவது கரண்.

கோலிவுட்டில் தற்போது எம்ஜிஆர், ரஜினி நடித்த படங்களின் டைட்டில்களை வைத்து மீண்டும் புதிய படங்கள் எடுப்பது வழக்கமாகிவிட்டது.

ரஜினி நடித்த பொல்லாதவன் படத்தின் பெயரில் தனுஷ் நடித்த படம் ரிலீசாகி ஓரளவுக்கு நன்றாகவே ஓடிக் கொண்டுள்ளது. அதே போல் ரஜினியின் பில்லாவை மீண்டும் உருவாக்கி வருகிறார் அஜித்.

இதேபோல் எம்ஜிஆரின் நம்நாடு தலைப்பை வைத்து ஒரு படத்தை வெளியிட்டார் சரத்குமார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் நான் ஒருவன் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படி எடுக்கப்படும் படங்களில் பழைய பாடல்களையும் ரீ-மிக்ஸ் செய்து நுழைத்தால் படம் ஹிட்டாகும் ஒரு நம்பிக்கை கோலிவுட்டில் செட்டாகிவிட்டது. சென்டிமென்ட்பாக்கமான கோடம்பாக்கம் இந்த டிரண்டை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது.

இந் நிலையில் காளி என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இதில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது காத்தவராயன் படத்தில் நடித்து வரும் கரண் அடுத்து காளியாகிறார்.

கரணுக்கு இதில் சிரிப்பழகி ஸ்னேகா, சந்தியா என அவருக்கு 2 ஜோடிகளாம். கரண் கதாநாயகனாக நடித்த முதல் படமான கொக்கியை தயாரித்த பிரண்ட்ஸ் சினிமா நிறுவனம் தான் இதையும் தயாரிக்கிறது.

முன்பெல்லாம் படத்தின் கதைகளுக்கு தான் ஒரே திண்டாட்டமாக இருக்கும். ஆனால் இப்போது படத்தின் டைட்டில்களுக்கே பற்றாக்குறை நிலவுகிறது.

தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்குக்காக தமிழ் பட பெயரை தேர்ந்தெடுப்பதற்கு தான் பழைய படத்தின் டைட்டிலை போட்டி போட்டுக்கொண்டு வேட்டையாடுகிறார்கள் போலிருக்கிறது.

Read more about: karan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil