என் பெரிய கனவு நிறைவேறப் போகிறது: சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி
Recommended Video

சென்னை: தனது பெரிய கனவு ஒன்று நிறைவேறப் போவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இன்று நேற்று நாளை படத்தை எடுத்த அதே ரவிக்குமார் தான்.

ரவிக்குமார்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சயின்ஸ் ஃபிக்ஷனாம். இந்த படம் அனைத்து தரப்பட்ட ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்கிறார் சிவகார்த்திகேயன்

ரஹ்மான்
ரவிக்குமார், சிவகார்த்திகேயன் இணையும் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
கனவு
ரஹ்மான், சிவகார்த்திகேயன் முதன்முறையாக சேர்ந்து பணியாற்ற உள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றுவதன் மூலம் தனது பெரிய கனவு நிறைவேறப் போவதாக சிவகார்த்திகேயன் ட்வீட்டியுள்ளார்.

பெருமை
தமிழர் திருநாளில் தமிழையும், தமிழ் இசையையும் உலக அரங்கில் பறைசாற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்த உலக இசை நாயகன் @arrahman இசையில் @Siva_Kartikeyan நடிக்கும் @Ravikumar_Tup இயக்கும் புதிய படைப்பில் இணைவதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம்👍#SivakarthikeyanNewFilm #2019Release 👍 என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











