»   »  பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல!- சல்மான்கான்

பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல!- சல்மான்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

உரி ராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவின் தலைமையில் செயல்படும் 'மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா' கட்சியின் கலை இலக்கிய பிரிவு, பாகிஸ்தானிய நடிகர்கள் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

Pak actors are not terrorists, says Salman Khan

மேலும் படப்பிடிப்பிற்காக மும்பையில் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானிய நடிகர்கள் வெளியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் நடிகர்கள் நடித்து வெளியாகும் பாலிவுட் படங்களைத் தடுத்து நிறுத்திடுவோம் என்றும் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் விதத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறுகையில், "தீவிரவாதிகளுக்கு எதிராக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும். ஆனால் பாகிஸ்தான் நடிகர்கள் என்பவர்கள் தீவிரவாதிகள் அல்லர். இந்திய அரசாங்கம்தான் அவர்களுக்கு விசாவும், அனுமதியும் வழங்குகிறது," என்றார்.

English summary
Actor Salman Khan says that Pakistan actors are not terrorists.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil