»   »  பார்த்திபனின் வேட்டை!

பார்த்திபனின் வேட்டை!

Subscribe to Oneindia Tamil


அம்முவாகிய நான் சிறப்பாக ஓடியதால் சந்தோஷமடைந்துள்ள பார்த்திபன், மீண்டும் இயக்கத்தில் இறங்குகிறார். ஏறக்கட்டி வைத்திருந்த வித்தகன் படத்தை கையில் எடுத்துள்ளார். நாயகியைப் பிடிப்பதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார்.

Click here for more images

பார்த்திபனுக்கு ஒரு ராசி உண்டு. அடுத்தவர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்துமே அமோக வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் (புதிய பாதை உள்ளிட்ட ஓரிரு படங்களைத் தவிர) பெரும்பாலும் பிரகாசிக்கவில்லை.

இதனால் இடையில் இயக்கத்தை விட்டு விட்டு வெறுமனே நடிக்க மட்டும் ஆரம்பித்தார். சரமாரியாக நடித்து வந்த பார்த்திபன் திடீரென இடையில் இது, பச்சக்குதிரை என இரு படங்களை எடுத்து கையைச் சுட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் பத்மாமகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அம்முவாகிய நான் அபார வெற்றி பெற்றது. பாரதியின் கவர்ச்சிக்காக மட்டுமல்லாமல் அவரது நல்ல நடிப்புக்காகவும், நல்ல திரைக்கதைக்காகவும் படம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மறுபடியும் இயக்க வருகிறார் பார்த்திபன். நீண்ட நாட்களுக்கு முன்பு அவர் பதிவு செய்து வைத்திருந்த படம் வித்தகன். ஆனால் படத்தை ஆரம்பிக்காமல் நிறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மறுபடியும் இப்போது வித்தகனை தூசு தட்டி எடுத்துள்ளார். இந்தப் படத்துக்கு புதுமுகம் ஒருவரை நாயகியாகப் போடத் தீர்மானித்துள்ள பார்த்திபன், இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளாராம்.

மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணை, வித்தியாசமான அழகுடன் கூடிய பெண்ணாகத் தேடிக் கொண்டிருக்கிறாராம். நாயகி கிடைத்தவுடன் கோலிவுட்டுக்குத் திரும்பி கோலாகலமாக படத்திற்குப் பூஜை போட்டு ஷூட்டிங்குக்குக் கிளம்பும் திட்டமாம்.

விஜயகாந்த் நடிக்க வித்தகன் என்ற படத்திற்கு முதலில் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் பார்த்திபன் இந்தப் பெயரை பதிவு செய்து வைத்திருந்ததால் அந்தப் படம் அரசாங்கம் என மாறியது நினைவிருக்கலாம்.

பார்த்திபனின் வித்தகன், வித்தை காட்டுமா?

Read more about: director, padmamagan, parthiban, vithagan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil