HBD OG: பட்டாசா இருக்கு பவன் கல்யாண் ஓஜி க்ளிம்ப்ஸ்.. கடைசி வரை பிரியங்கா மோகனை காட்டலையேப்பா!

ஹைதராபாத்: பவன் கல்யாண் பிறந்தநாளையொட்டி, 'ஓஜி' படக்குழுவினர் ஒரு சிறப்பு டீசரை வெளியிட்டுள்ளனர். இதில், பவன் கல்யாணும், ஓமி பாவுவாக வரும் இம்ரான் ஹாஷ்மியும் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். பவன் கல்யாண் மற்றும் இம்ரான் ஹாஷ்மி நடிப்பில் உருவாகி வரும் 'ஓஜி' திரைப்படம், 'தே கால் ஹிம் ஓஜி' என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இது தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

இம்ரான் ஹாஷ்மி இப்படத்தில் ஓமி பாவு என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பவன் கல்யாண் பிறந்தநாளில் ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியாகும் என அவர் நேற்று கிரிப்டிக் போஸ்ட் செய்திருந்தார். "நாளை மாலை 4:05 மணிக்கு அனைவரையும் சந்திக்கிறேன் #OG #TheyCallHimOG" என்று அவர் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த டீசர் வெளியாகி பவன் கல்யாண் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

Pawan Kalyan Birthday treat OG Glimpse out now
Photo Credit:

'HBD ஓஜி - லவ் OMI' என்ற தலைப்பில் வெளியான இந்த டீசரில், இம்ரான் ஹாஷ்மி மிரட்டலான ஓமி பாவு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். டீசரின் தொடக்கத்தில், இம்ரான் ஹாஷ்மி ஒரு படகில் அமைதியாக ஓய்வெடுப்பது காட்டப்படுகிறது. ஆனால் அடுத்த காட்சியிலேயே, அவர் இரண்டு நபர்களை கொடூரமாக தாக்கி கொலை செய்கிறார். பின்னர் "ஹேப்பி பர்த்டே ஓஜி" என்று கூறுவது கேட்கிறது.

மறுபுறம், பவன் கல்யாண் ஒரு பெரிய வாளை ஏந்தி, கோபமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்த டீசரில், இருவருக்கும் இடையே ஒரு விறுவிறுப்பான மோதலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். பின்னணி இசை படத்தின் தீவிரத்தை மேலும் கூட்டுகிறது. ஒரு ரசிகர், "தமன் மற்றும் அனிருத் காம்பினேஷன், செட்கள், லொகேஷன், இம்ரான் ஹாஷ்மி, பவன் கல்யாண், குறிப்பாக பின்னணி இசை அருமை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், "இம்ரான் ஹாஷ்மியை இவ்வளவு சிறப்பாக யாரும் காட்டியதில்லை... ப்யூர் ஆக்‌ஷன்" என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது ரசிகர், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவர் ஸ்டார், சூப்பர் கிளிம்ப்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.

சுஜீத் இயக்கத்தில், டி.வி.வி தனய்யா தயாரிப்பில் டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் உருவாகும் 'ஓஜி' திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகியுள்ளது. இம்ரான் ஹாஷ்மி இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமாகிறார். பவன் கல்யாண், ஓஜாஸ் கம்பீரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஹரிஷ் உத்தமன் போன்ற பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 'ஓஜி' திரைப்படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பவன் கல்யாணி, நிதி அகர்வால் நடிப்பில் வெளியான ஹரிஹர வீரமல்லு படத்தை போல இல்லாமல் இந்த படம் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஹர வீரமல்லு படத்தில் சிஜி காட்சிகள் ரொம்பவே குழந்தைத்தனமான அனிமேஷனில் உருவாக்கியது படத்துக்கு பெரும் பின்னடைவாக மாறியது. ஓடிடியில் படம் வெளியான பின்னர் தான் பலரும் அந்த படத்தை ட்ரோல் செய்யவே ஆரம்பித்தனர்.

துணை முதல்வராக மாறிய பின்னர் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X