கூலி முதல் நாள் வசூலை காலி பண்ண ரெடியான ஓஜி.. பவன் கல்யாணின் படைபலம் சும்மா மிரட்டுதே!

ஹைதராபாத்: பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள 'தே கால் ஹிம் ஓஜி' (They Call Him OG) என்ற கேங்ஸ்டர் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையைப் படைக்க தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச சந்தைகளிலும் முன்கூட்டிய முன்பதிவுகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

சுஜித் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் இன்று இரவு வெளிநாடுகள் மற்றும் ப்ரீமியர் வெளியாகும் நிலையில், இது பவன் கல்யாணின் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக மாறிவிட்டது. உலகளவில் முதல் நாள் முன்பதிவு சுமார் 75 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது பவன் கல்யாணின் படங்களில் மிகப்பெரிய தொடக்கமாக அமைந்துள்ளது.

Pawan Kalyan s OG expected to beat Rajinikanth s Coolie First Day Record at Box Office
Photo Credit:

இதற்கு முன்பு, பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' (Hari Hara Veera Mallu) திரைப்படம் உலகளவில் சுமார் 67 கோடி ரூபாயை முதல் நாளில் ஈட்டியிருந்தது. ஆனால், 'ஓஜி' திரைப்படம் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வசூலை ஈட்டும் என்று பாக்ஸ் ஆபீஸ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் முதல் நாள் வசூலை ஈட்டலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

'ஓஜி' திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தால், அது பவன் கல்யாணின் வாழ்நாள் வசூல் சாதனையான 'பீம்லா நாயக்' (Bheemla Nayak) படத்தின் (158.50 கோடி ரூபாய்) உலகளாவிய வசூலுக்கு மிக அருகில் வந்துவிடும். முதல் நாள் வசூல் எதுவாக இருந்தாலும், 'ஓஜி' இரண்டு நாட்களுக்குள் நடிகர் பவன் கல்யாணின் மிகப்பெரிய வசூல் படமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. ரஜினிகாந்தின் கூலி படத்தின் முதல் நாள் வசூலை ஓஜி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் ஏ சான்றிதழ் படம் என்பது கூடுதல் தகவல்.

முதல் நாளுக்கான அட்வான்ஸ் புக்கிங் மூலம் 'ஓஜி' திரைப்படம் 90-100 கோடி ரூபாய் வசூலை நோக்கி நகர்கிறது. இதுவரை, இந்தியாவில் சுமார் 45 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகள் உட்பட 30 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. அண்மைக் காலங்களில் பவன் கல்யாண் நடித்த படங்களில் 'ஓஜி' படத்திற்கே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன் அட்வான்ஸ் புக்கிங் மற்றும் ஒரு டிக்கெட்டை 5 லட்சம் ரூபாய் கொடுத்து வெளிநாட்டிலும், சித்தூரில் 1 லட்சம் கொடுத்து ஒரு ரசிகரும் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ப்ரீமியர் காட்சிகளின் டிக்கெட் விலை 1000 ரூபாய்க்கு மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pawan Kalyan s OG expected to beat Rajinikanth s Coolie First Day Record at Box Office
Photo Credit:

டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தில், பவன் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இம்ரான் ஹாஷ்மி (தெலுங்குத் திரைப்படத்தில் முதல் அறிமுகம்), பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஷ்ரேயா ரெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஓஜாஸ் காம்பீரா என்ற கேங்ஸ்டரைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. அவர் பத்து வருடங்களுக்குப் பிறகு மும்பைக்குத் திரும்பி, மற்றொரு குற்றப் புள்ளியான ஓமி பாயைக் கொல்ல முயற்சிக்கிறார் என்பது தான் கதை என்கின்றனர்.

ஹரி ஹர வீர மல்லு ஓபனிங் சூப்பராக இருந்த நிலையில், படம் சரியாக ஓடவில்லை. ஓஜி படம் ரசிகர்களை கவர்ந்துவிட்டால் டோலிவுட்டில் அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் என்கின்றனர். ஓஜி படத்தின் ரிலீஸ் காரணமாக நாளை 100 கோடிக்கு மேல் வசூலித்த மிராய் படம் எந்த தியேட்டரிலும் ஓடாது என சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 26ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மிராய் திரையிடப்படும் என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X