»   »  ஜீவனின் 'பயணிகள் கவனத்திற்கு'

ஜீவனின் 'பயணிகள் கவனத்திற்கு'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Jeevan
வில்லனாக அவதரித்து கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்து வெற்றி நடைபோட்டு வரும் ஜீவன் தற்போது பயணிகள் கவனத்திற்கு என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

யுனிவர்சிட்டி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ஜீவன். தலை நிறைய நிரம்பி வழிந்த முடியுடன் வந்து போன ஜீவன் அப்படத்திற்குப் பிறகு, நல்ல வாய்ப்புக்காக நீண்ட காலம் காக்க வேண்டியிருந்தது - காக்க காக்க படம் வரும் வரை.

காக்க காக்க படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்தார் ஜீவன். இப்படம் ஜீவனுக்கு பெரிய பிரேக் ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து நிறை படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பே வந்தது. ஆனாலும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற முடிவெடுத்தார் ஜீவன். இதனால் வந்த வில்லன் வாய்ப்புகளையெல்லாம் உதறித் தள்ளினார்.

அவருடைய காத்திருப்பு வீண் போகவில்லை. திருட்டுப்பயலே படத்தின மூலம் நிறைவேறியது. திருட்டுப்பயலே பெரும் வெற்றி பெற்றது. ஜீவனுக்கு ஸ்டார் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது.

இதையடுத்து வந்த நான் அவனில்லை படமும் சூப்பர் ஹிட் ஆனதால், வேகமாக பிக்கப் ஆகி விட்டார் ஜீவன். சமீபத்தில் தீபாவளிக்கு காம்னா கூட்டணியில் வெளியான மச்சக்காரன் சுமாராக ஓடிக் கொண்டுள்ளது. படத்தால் யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது பிரியா மணியுடன் தோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜீவன். இந்தப் படத்தில் மாளவிகா இல்லையாம் (இதனால் ஜீவனுக்கு கொஞ்சம் வருத்தம்தானாம்).

இந்த நிலையில் அடுத்து இ.எல்.கே.புரொடக்ஷனஸ் தயாரிக்கும் பயணிகள் கவனத்திற்கு என்ற படத்தில் ஜீவன் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை இயக்குபவர் எஸ்.ஏ.விஜயகுமார். குறுகிய கால பட்ஜெட் படமாக அமையப் போகும் இந்தப் படம், ரயில் சம்பந்தப்பட்ட கதை.

ரயிலில் பயணிக்கும் ஜீவன் ஒரு சம்பவத்தை சந்திக்க நேரிடுகிறது. அதிலிருந்து அவரும் மீண்டும், பிற பயணிகளையும் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதையாம். படம் முழுக்க ரயிலிலேயே எடுக்கிறார்களாம்.

ஜீவனுக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரியாவை முதலில் அணுகினர். ஆனால் அவர் கால்ஷீட் டைட்டால் முடியாது என்று கூறி விட்டாராம். இதனால் இப்போது நயனதாரா அல்லது நமீதா ஆகிய இருவரில் ஒருவரைப் பிடிக்க முயன்று வருகின்றனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil