twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நிதி.. தாராளம் காட்டிய தல அஜித்.. டிரெண்டாகும் #PerfectCitizenThalaAJITH

    |

    சென்னை: கொரோனா நிதிக்கு தல அஜித் என்ன கொடுத்தார் என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தாராளமாக 1.25 கோடி நிதியை வழங்கி உள்ளார்.

    Recommended Video

    Breaking: Thala Ajith Massive donation for கொரோனா relief | FEFSI | Lock Down

    பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயையும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயையும், FEFSI தொழிலாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியையும் வழங்கி உள்ளார்.

    தல அஜித்தின் இந்த தாராள மனசை பார்த்து அசந்து போன அவரது ரசிகர்கள் #PerfectCitizenThalaAJITH என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    கொரோனா பாதிப்பு..1கோடியே 32.5 லட்சம் நிதி.. வாரி வழங்கிய அஜித் !கொரோனா பாதிப்பு..1கோடியே 32.5 லட்சம் நிதி.. வாரி வழங்கிய அஜித் !

    விவேகம் டிரெண்டிங்

    விவேகம் டிரெண்டிங்

    இன்று இரவு 7 மணிக்கு கே டிவியில் தல அஜித்தின் விவேகம் படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதை இன்று காலை முதலே அஜித் ரசிகர்கள் #Vivegam என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். சிவா இயக்கத்தில் பயங்கர எதிர்பார்ப்புடன் வெளியான விவேகம் திரைப்படம் ஹிட் ஆகவில்லை என்றாலும், அஜித் ரசிகர்களின் ஃபேவைரட் படமாக விவேகம் மாறியுள்ளது.

    கொரோனா நிதி

    கொரோனா நிதி

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி PM Care என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி, நாட்டு மக்கள் தாராளமாக நிதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். உடனடியாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 25 கோடி நிதியளிப்பதாக உறுதியளித்தார். டோலிவுட் நடிகர்களான பிரபாஸ், மகேஷ் பாபு, பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கினர்.

    ஃபெப்ஸி

    ஃபெப்ஸி

    சினிமா படப்பிடிப்புகள் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் FEFSI தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் நிதியளித்தார். மேலும், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களால் முடிந்த நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், FEFSI தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் 25 லட்சம் நிதியளித்துள்ளார்.

    சிறந்த குடிமகன்

    பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், சினிமா தொழிலாளர்களுக்கு 25 லட்சம் என மொத்தம் 1.25 கோடி கொரோனா நிதி வழங்கி உள்ள நடிகர் அஜித்தை பாராட்டும் விதத்தில் தல ரசிகர்கள் #PerfectCitizenThalaAJITH என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    பெருமையா இருக்கு

    கொரோனா நிவாரண நிதிக்காக மற்ற நடிகர்கள் நிதி வழங்கி வந்த நிலையில், கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித், மெளனமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக 1.25 கோடி ரூபாயை தாராளமாக வழங்கிய தல அஜித்தை நினைத்து பெருமையா இருக்கு என அவரது ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிடுகின்றனர்.

    English summary
    Thala Ajith donates 1.25 crores for Corona relief fund. He splits each 50 lakh rupees for PM and CM relief fund and 25 lakhs to FEFSI.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X