»   »  எதிர்வாதம் பண்ணாம, ஹெல்மட் போடுங்க... கமல் ஹாஸன் வேண்டுகோள்

எதிர்வாதம் பண்ணாம, ஹெல்மட் போடுங்க... கமல் ஹாஸன் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை 1 முதல் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் உத்தரவால், நாளுக்கு நாள் தலைக்கவசத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முதலில் ரோடை ஒழுங்காக போடுங்கள் பிறகு உத்தரவுகளை இடுங்கள் என்று, சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்து வருகின்றனர் பலரும். இந்நிலையில் மக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் தமிழகக் காவல் துறையினர்.

ஏற்கனவே கோவையில் நடிகர் அஜீத் படத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர், இந்த முயற்சி வெற்றி பெற்றது. தற்போது நடிகர் கமல் ஹாஸனும் தனது பங்கிற்கு தலைக்கவசம் அணியுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வாதம் செய்யாதீர்கள்

எதிர்வாதம் செய்யாதீர்கள்

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலையைப் பாதுகாக்க, கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள். இதைப் பற்றி நாங்கள் கூறினால் நீங்கள் தலைக்கவசம், அணியாமல் தானே படத்தில் வண்டி ஓட்டுகிறீர்கள் என்று எதிர்வாதம் செய்யாதீர்கள்.

பாதுகாப்பு எங்களுக்கு உண்டு

பாதுகாப்பு எங்களுக்கு உண்டு

சினிமாவில் நாங்கள் நடிக்கும் போது எங்கள் அருகினில் பாதுகாப்புக்கு என்று, ஏராளாமான பேர் நிற்கிறார்கள். நாங்கள் நடிப்பதை பாதுகாப்புடன் தான் செய்து கொண்டிருக்கிறோம், அதனால் எங்களைப் பார்த்து விட்டு நீங்கள் தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம்.

சினிமாவும் வாழ்க்கையும் வேறு வேறு

சினிமாவும் வாழ்க்கையும் வேறு வேறு

சினிமாவில் சூப்பர்மேன் பறந்து போகிறார், உங்களால் அது போன்று செய்ய முடியுமா? மேலும் நீங்கள் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியில் பார்களில் தொங்குவார்கள் உங்கள் வீட்டு பைப்புகளில் அது போன்று செய்ய முடியுமா? அது போன்று தலைக்கவசம் அணிவதையும் சிந்தித்துப் பார்த்து செய்யுங்கள்.

உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள், உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்திருக்கிறார் கமல்.

English summary
Actor Kamal Advice To Fans “ Please Use Helmet, Don’t Follow The Cinema Scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil