»   »  யுவால் நோவாவின் 'சேபியன்ஸ்' புத்தகத்தை படிக்காதவர்கள் உடனே படிங்க: கமல்

யுவால் நோவாவின் 'சேபியன்ஸ்' புத்தகத்தை படிக்காதவர்கள் உடனே படிங்க: கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: யுவால் நோவா ஹராரேவின் சேபியன்ஸ் புத்தகத்தை படிக்குமாறு கமல் ஹாஸன் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் போடும் ட்வீட்டுகள் அதிகம் பேசப்படுகிறது. அவர் போடும் ட்வீட்டுகளின் அர்த்தத்தை புரிந்து கொள்ள அகராதி வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில் கமல் ட்விட்டரில் ஒரு பரிந்துரை செய்துள்ளார்.

சேபியன்ஸ்

மிகவும் முக்கியமான விஷயங்களுக்கு வருவோம். யுவால் நோவா ஹராரேவின் சேபியன்ஸ் புத்தகத்தை படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவும்.
தமிழிலும் வரவேண்டும்."சேபியன்ஸ்" என ட்வீட்டியுள்ளார் கமல்.

படிச்சுட்டு வாங்க

@ikamalhaasan நான் சொல்றது புரியலைன்னா இத படிச்சுட்டு வாங்க, எதையுமே படிக்காம வந்து இதையும் புரியலைன்னு சொல்லாதீங்கன்றார் 😜😜 என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

படிச்சுறுவோம்

@ikamalhaasan படிச்சுறுவோம் ஆண்டவரே.. இந்த மாதிரி புஸ்தகம் எல்லாம் படிச்சு தான் நீ இம்புட்டு சோக்கா பேசுறியா தலைவா?? நானும் படிக்கிறேன்.

புத்தகம்

@ikamalhaasan திருக்குறளே இங்கு பாதி பேர் படிச்சிருக்க மாட்டானுங்க.. புதுசா ஒரு புத்தகம் பேர் சொல்றீயே தலைவா....

படிக்க

4 நாள் ஆகும் இதை படிக்கவே இதுல புக்கு வேறயா தலைவரே

English summary
Kamal Haasan tweeted that, 'To get back to more sensible matters.Those who have'nt already read,Pls read,Yuval Noah Harare's Sapiens.தமிழிலும் வரவேண்டும்."சேபியன்ஸ்"'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil