»   »  விஷாலின் மனித நேயம்... போலீஸ் பாராட்டு!

விஷாலின் மனித நேயம்... போலீஸ் பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1200 போலீசார் குடும்பங்களுக்கு விஷால் செய்த உதவிக்காக சென்னை மாநகர போலீசார் அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகள் கழித்து பெய்த பெருமழையால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன.

Police praises Vishal's timely help

பல ஆயிரங்கணக்கான மக்கள் அவர்களுடைய வீட்டையும் பொருட்களையும் விட்டு வெளியேறி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை உலகறியும்.

இம்மழை வெள்ளத்தால் நல்ல உள்ளமிக்க மனிதர்களையும் மற்றும் உதவி செய்யும் பல நிறுவனங்களையும் நாம் கண்டோம்.

நடிகர் விஷால் கிருஷ்ணா தன்னுடைய பெரும்பங்காக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், வெள்ள நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க திறமையுடனும் தன் குடும்பதை பாராமலும் இரவு பகலாய் பணிபுரிந்த காவல் துறை நண்பர்களின் சுமார் 1200 குடும்பங்களுக்கு, உதவும் விதத்தில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இதற்காக சென்னை காவல் துறை சார்பில் விஷால் கிருஷ்ணாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

"விஷால் திரையில் மற்றும் கதாநாயகன் அல்ல, நிஜ வாழ்விலும் சிறந்த கதாநாயகன் தான். இதுபோல் அவர்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்," என்று போலீஸார் பாாட்டியுள்ளனர்.

English summary
Chennai Police have praised actor Vishal for his timely relief help for 1200 policemen affected in flood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil