»   »  இதிலும் அரசியல் உண்டல்லவா?.. தோழரே: கமலையே மடக்கிய ரசிகர்கள்

இதிலும் அரசியல் உண்டல்லவா?.. தோழரே: கமலையே மடக்கிய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை அரசியலுக்கு அழைத்த ரசிகர்களுக்காக கமல் ஹாஸன் போட்ட ட்வீட்டுக்கு ரசிகர்கள் அளித்த பதில்கள் சுவாரஸ்யமாக உள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவ-மாணவியருக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் ஆதரவு தெரிவித்தார். அமைதியாக போராடியவர்களை போலீஸ் தாக்கியதையும் கண்டித்தார்.

இதையடுத்து அவரை ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு கூறினர்.

அரசியல்

கேள் தோழனேநண்பனே ஆசானேமூடபக்தனே. உன்னுடன் நிற்கத்துணிந்த எனைஅரசியல் தலைவருடனா சேரச்சொல்வாய்? எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா என தன்னை அரசியலுக்கு அழைத்த ரசிகர்களுக்காக ட்வீட்டினார் கமல்.

மெட்ராஸ் தமிழ்

@ikamalhaasan ஆண்டவரே ஒன்னும் புரியல, madras தமிழ் ல சொல்லுங்க.. என ஒரு ரசிகர் கேட்டதற்கு மற்றொரு ரசிகர் கமல் கூறியதை மெட்ராஸ் தமிழில் கூறியுள்ளார்.

வந்தால்

உங்கள @ikamalhaasan அரசியலுக்கு வாங்கனு சொல்லவில்லை,வந்தால் நல்லா இருக்கும்னுதான் சொல்றோம்😁

இப்ப மட்டும்

@ikamalhaasan குருநாதா நல்ல வேளையா தமிழ்ல போட்டீங்க...இல்லனா ஒரு வாரத்துக்கு மண்ட காய்ஞ்சிருக்கும்🤗🤗🤗 என ஒருவர் ட்வீட்ட அதை பார்த்த மற்றொருவர் இப்பமட்டும் என்னவாம் என கேட்டுள்ளார்.

தோழரே

@ikamalhaasan தோழர் என்று ஆரம்பித்து மூடபக்தன் என்று முடித்திருக்கிறீர்கள். இதிலும் அரசியல் உண்டல்லவா?.. தோழரே 😂😂

English summary
Fans couldn't stay mum after seeing Kamal Haasan's tweet on politics. Fans' comments are hilarious.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil