»   »  பொல்லாதவன் + புதுப்பேட்டை = வடசென்னை!

பொல்லாதவன் + புதுப்பேட்டை = வடசென்னை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை ஷூட்டிங் தொடங்கி பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.

படம் முழுக்கவே வடசென்னையில் நிகழும் கதை என்பதால் முக்கிய காட்சிகளை லைவ்வாகவும், பல காட்சிகளை பின்னி மில்லில் செட் போட்டும் எடுத்து வருகிறார் வெற்றி.


Polladhavan + Pudhupettai = Vada Chennai

வடசென்னையின் காஸ்டிங்கைப் பார்த்தால் பொல்லாதவன் பார்ட் 2 போலவே இருக்கிறது. பொல்லாதவனின் நடித்த டேனியல் பாலாஜி, கிஷோர், பவன், கருணாஸ் ஆகியோர் வடசென்னையிலும் நடிக்கிறார்கள்.


பொல்லாதவன் போலவே இதிலும் டேனியல் பாலாஜி வில்லனாகவே வருகிறார்.


படத்தின் முக்கிய கேரக்டராக பாலியல் தொழிலாளியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். புதுப்பேட்டையிலும் முக்கிய கதாபாத்திரம் ஒரு பாலியல் தொழிலாளிதான். சிநேகா அதனை சிறப்பாகச் செய்திருந்தார்.


ஆக, இரண்டு படங்களின் கலவை தான் வடசென்னை என்று சொல்லலாமா தனுஷ்?

English summary
It seems the casting of Dhanush's Vada Chennai is remembers the combination of hie earlier movies Pudhupettai and Polladhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil