»   »  கவனிக்கப்படாத கமல் படம்!

கவனிக்கப்படாத கமல் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ள வேட்டையாடு விளையாடு படத்திற்கு சரியான விளம்பரம் செய்யப்படாததால் அப்படம் அங்கு சரியான கவனிப்பின்றி திரையரங்குகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாம்.


மற்ற நடிகர்களை விட கமல்ஹாசன் பல விஷயங்களில் வித்தியாசமானவர். தனது படங்கள் குறித்து பெரும் அக்கறை கொண்டவர். தனது படங்கள் குறித்து சாதகமான செய்திகள் அதிக அளவில் வர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். இதற்காக மெனக்கெடுபவர். பத்திரிக்கையாளர்களுடன் தொடர்ந்து நல்லுறவில் இருந்து வருபவர்.

கமல்ஹாசன் படங்கள் குறித்து தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு நெகட்டிவான செய்தியும் வந்ததில்லை. அப்படிப்பட்ட கமல்ஹாசனின் படம் ஒன்று, சாதாரண படம் அல்ல - பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ஒன்று ஆந்திராவில் கவனிப்பாரின்றி சுணங்கிப் போயுள்ளது.

தமிழில் மாபெரும் ஹிட் ஆன, கமல்ஹாசனுக்கு கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதை வாங்கித் தந்த வேட்டையாடு விளையாடு படம்தான் அந்த பரிதாபத்துக்குரிய படம்.

சமீபத்தில் இப்படத்தை ராகவா என்ற பெயரில் டப் செய்து தெலுங்கில் வெளியிட்டனர். ஆனால் சரியான பப்ளிசிட்டி இல்லாமல், விளம்பரம் இல்லாமல் படம் குறித்த பரபரப்பே இல்லாமல் வேகமாக தியேட்டர்களை விட்டு திரும்பிக் கொண்டிருக்கிறதாம்.

முதலில் இப்படத்திற்கு வேட்டாடு வெண்டாடு என்று பெயரிட்டனர். பின்னர் அது மகாதீரா என்று மாற்றப்பட்டது. கடைசியாக ராகவா என்ற பெயர் சூட்டப்பட்டது.

கடந்த வாரம் ஆந்திராவில் இப்படம் திரையிடப்பட்டது. தமிழில் மிகப் பெரிய ஹிட் ஆன போதிலும் தெலுங்கில் இப்படம் சரியாக போகாததற்குக் காரணம் உரிய முறையில் விளம்பரம் செய்யப்படாததே காரணம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ராகவா திரையிடப்பட்ட தியேட்டர்களிலிருந்து பெட்டிகள் திரும்பிக் கொண்டிருக்கின்றனவாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil