ரூ.1 கோடி நன்கொடை அறிவித்த பிரபாஸ்...எதற்கு தெரியுமா ?

ஐதராபாத் : தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இரந்த பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். பான் இந்தியன் நடிகராக இருந்து வரும் பிரபாஸ், ஏராளமானவர்களின் ஃபேவரைட் ஹீரோவாக மாறி உள்ளார்.

தற்போது ராதே ஷ்யாம், ஆதி புருஷ் ஆகிய பான் இந்தியன் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் பிரபாஸ். இவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

 Prabhas announces Rs.1 crore donation

பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபாஸ் ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்காக இந்த பணத்தை அவர் வழங்கி உள்ளாராம். ராயலசீமா பகுதியில் ஏற்ப வெள்ள பாதிப்புக்களை சரி செய்வதற்காகவும், நிவாரணங்கள் வழங்க பயன்படுத்தவும் இந்த தொகை செலவிடப்பட உள்ளதாம்.

டோலிவுட்டை சேர்ந்த ஒருவர் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கி உள்ள அதிகபட்ச தொகை இது தானாம். இதற்கு முன் வெள்ள நிவாரண நிதிக்காக அளிக்கப்பட்ட தொகைகளில் ரூ.25 லட்சம் தான் உயர்ந்த தொகையாக கருதப்பட்டது.

தெலுங்கு டாப் ஸ்டார்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கி உள்ளனர். அதிகமான தொகைகளை நன்கொடையாக வழங்குவது பிரபாசிற்கு ஒன்றும் புதிதல்ல.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல் ஆளாக நன்கொடை வழங்கியவர் பிரபாஸ் தான். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.1 கோடியை பிரபாஸ் வழங்கி இருந்தார். அதே போல் பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூ.3 கோடியையும் பிரபாஸ் வழங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X