»   »  'பாகுபலி 2' சூப்பர் ஹிட்டாகியும் இந்த பிரபாஸுக்கு இப்படி ஒரு நிலையா!

'பாகுபலி 2' சூப்பர் ஹிட்டாகியும் இந்த பிரபாஸுக்கு இப்படி ஒரு நிலையா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாஹோ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கிடைக்கவில்லையாம்.

தெலுங்கில் தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்திருந்த பிரபாஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடிக்க வசதியாக அவர் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார்.

சாஹோ

சாஹோ

பாகுபலி, பாகுபலி 2 படங்களை முடித்துவிட்ட நிலையில் பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஷங்கர்-இஹ்சான்-லாய் இசையமைக்கிறார்கள்.

டீஸர்

சாஹோ படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியானது. அதில் தமிழ் பதிப்பு டீஸர் மட்டும் முன்கூட்டியே இணையதளத்தில் கசிந்துவிட்டது.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா அளவில் பிரபாஸுக்கு மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃப், பரினீத்தி சோப்ரா, ஷ்ரத்தா கபூரிடம் கேட்க அவர்கள் மறுத்துவிட்டார்களாம்.

புதுமுகம்

புதுமுகம்

பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகள் மறுத்துவிட்டதையடுத்து புதுமுகம் யாரையாவது ஹீரோயினாக்க திட்டமிட்டுள்ளார்களாம். பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Prabhas is acting in Saaho after Baahubali 2. Director Sujeeth is reportedly looking for a fresh female lead after leading heroines refused to act.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil