»   »  பாகுபலி போன்ற மற்றொரு படத்தில் நடித்தால் செத்தே போய்டுவேன்: பிரபாஸ்

பாகுபலி போன்ற மற்றொரு படத்தில் நடித்தால் செத்தே போய்டுவேன்: பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி போன்று ஒரு படத்தில் நடிக்க முயன்றால் நான் செத்தே போவேன் என்று நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோரை வைத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த படத்திற்காக மட்டும் பிரபாஸ் 5 ஆண்டுகள் ஒதுக்கியுள்ளார்.

அரசியல்

அரசியல்

பாகுபலி படம் மூலம் கிடைத்த பெயரையும், புகழையும் வைத்து நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன். அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. எனக்கு அரசியல் ஆசை எல்லாம் கிடையாது என்கிறார் பிரபாஸ்.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி படங்களில் பணியாற்றியது வித்தியாசமான அனுபவம். சர்வதேச தரம் வாய்ந்த படத்தில் வேலை செய்ய கொடுத்து வைத்துள்ளேன். இது ராஜமவுலி சாரின் கனவு. அதற்கு நேரம் ஒதுக்கி நான் ஆதரித்தேன். அவ்வளவு தான் என பிரபாஸ் கூறியுள்ளார்.

செத்தேன்

செத்தேன்

பாகுபலி போன்று மற்றொரு படத்தில் நடிக்க முயன்றால் நான் செத்தேன். பாகுபலி போன்று ஒரு படம் எடுப்பது எளிது அல்ல. இது போன்ற படங்களை எடுக்க ராஜமவுலி சாருக்கு மட்டுமே அனுபவம் உள்ளது என்று நினைக்கிறேன் என பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

பாகுபலி 2 படத்தை இந்தியில் வெளியிடும் இயக்குனர் கரண் ஜோஹார் பிரபாஸை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க விரும்புகிறாராம். இது குறித்த அறிவிப்பு பாகுபலி 2 ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Prabhas jokingly said that he will die trying to do another Baahubali kind of film. Baahubali is not a film that can be easily replicated, he added.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil