»   »  மீண்டும் 'புதிய பறவை'!

மீண்டும் 'புதிய பறவை'!

Subscribe to Oneindia Tamil
Prabhu
சிவாஜி கணேசன் நடித்த புதிய பறவை படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளாராம் பிரபு.

இது ரீமேக் பட காலம். முன்னாள் ஹிட் படங்களை மீண்டும் புதிய வடிவில் கொடுக்க கோடம்பாக்கம் துடிக்கும் காலம். அந்த வரிசையில் முதலில் நான் அவனில்லை படம் வந்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பில்லா வெளியானது. இதுவும் ஹிட் ஆனது.

இதையடுத்து ஏகப்பட்ட ஹீரோக்கள் ரீமேக் படங்களில் நடிக்க துடியாத் துடிக்கிறார்கள். விக்ரம் கூட மூன்று முகம் படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிவாஜி கணேசன் நடித்த திரில்லர் படமான புதிய பறவையை ரீமேக் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் பிரபு. சிவாஜி பிலிம்ஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்படவுள்ளது.

இதில் சிவாஜி வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று இதுவரை பிரபு முடிவு செய்யவில்லையாம். ஆனால் அவர் யாருடைய வேடத்தில் நடிப்பது என்பதை முடிவு செய்து விட்டாராம். அதாவது மலேசிய சிஐடி அதிகாரி வேடத்தில் நடித்த எம்.ஆர்.ராதா கேரக்டரில்தான் பிரபு நடிக்கப் போகிறாராம்.

மற்ற கேரக்டர்கள் குறித்து இன்னும் ஆலோசனை அளவில்தான் இருக்கிறதாம். விரைவில் அனைத்தையும் முடித்து விட்டு அறிவிப்பு வெளியிடத் திட்டம் உள்ளதாம்.

சரோஜாதேவி, செளகார் ஜானகி வேடங்களில் யார் நடிக்கப் போகிறார்களோ?

Please Wait while comments are loading...