டேய் கொஞ்சம் சும்மா இருடா.. டியூடுக்கு ஹைப் ஏற்றிய ரசிகர்.. பதறிய பிரதீப் ரங்கநாதன்.. செம உஷார்
சென்னை: பிரடீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டியூட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துடன் பைசன், டீசல் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகவிருக்கின்றன. எனவே இந்த தீபாவளிக்கு போட்டி கொஞ்சம் பலமாகத்தான் இருக்கிறது. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிரதீப் மிகவும் தீவிரமாக கலந்துகொண்டுவருகிறார்.
கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாகவும் இன்ட்ரோ ஆனார். அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே நூறு கோடி ரூபாயை அள்ளியது. கோமாளி திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தன்னுடைய கரியர் ஆரம்பத்தில் வரிசையாக மூன்று படங்களை ஹிட்டாக கொடுத்துவிட்டார் அவர்.
ஹீரோ மெட்டீரியல்தான்: அவர் லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்தபோது அவரை கிண்டல் செய்யாத ஆட்களே இல்லை. இவரெல்லாம் ஹீரோ மெட்டீரியலா என்று ஓபனாகவே கேள்விகளை முன்வைத்தார்கள். அவரோ அதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அப்படி கேட்டவர்களுக்கு, ஆம் நான் ஒரு ஹீரோ மெட்டீரியல்தான் என்று லவ் டுடே, டிராகன் வெற்றிகள் மூலம் தரமான பதிலடியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டியூட் பிரதீப் ரங்கநாதன்: சூழல் இப்படி இருக்க மூன்றாவதாக அவர் டியூட் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் ஏழு வருடங்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரதீப்புடன் சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. புக்கிங்கிலும் ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துவருகிறது.
ட்ரெய்லர் சூப்பர்: படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் இருப்பது உறுதியாகியுள்ளது. டிராகனும் அதே ஜானரில்தான் வந்து ஹிட்டடித்தது. எனவே இதுவும் அதே ரிசல்ட்டை பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. அதேசமயம் போட்டிக்கு பைசன், டீசல் ஆகிய இரண்டு படங்களும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க ப்ரோமோஷன் பணிகளில் படு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
தீவிரமான ப்ரோமோஷன்: அந்தவகையில் நேற்று ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷனில் கலந்துகொண்டார் அவர். அப்போது அவர் தமிழில் பேச பேச மற்றொருவர் தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். பிரதீப் பேசுகையில், 'டியூட் நல்ல படம்' என்று மட்டும்தான் சொன்னார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பாளரோ, 'இந்தப் படத்தால் தியேட்டரே அதிரப்போகிறது. ஃபன்னுக்கு ஃபன், கன்டென்ட்டுக்கு கன்டெண்ட். ப்ளாக் பஸ்டர் சினிமா டிட்யூட்' என்று கூறினார்.
சுதாரித்த பிரதீப்: உடனே பதறிய பிரதீப் ரங்கநாதன், நல்ல படம் என்று இரண்டு வார்த்தைதானே சொன்னேன் என்று கூற; அதற்கு அருகில் இருந்தவரோ, 'தெலுங்கில் இப்படித்தான் நிறைய வார்த்தைகள் வரும்' என்று காமெடி செய்தார். அதனைத் தொடர்ந்து பிரதீப் பேச ஆரம்பித்தபோது மீண்டும் அருகில் இருந்தவர் மொழிபெயர்க்க தொடங்க, 'டேய் ஒரு நிமிஷம் சும்மா இரு டா' என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.


Click it and Unblock the Notifications











