ஏங்க.. தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனோட ரெண்டு படம் ரிலீஸ் ஆகப்போகுதாம்.. அப்போ சூர்யாவோட கருப்பு?
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் நடித்துள்ள எல்ஐகே திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகப் போவதாக விக்னேஷ் சிவன் நேற்று தான் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் டூட் படமும் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நாமளே ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது என நினைத்து லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக மாறினார்.

அந்த படமே 100 கோடி அளவுக்கு வசூல் ஈட்டித் தந்த நிலையில், ஏஜிஎஸ் தயாரிப்பில் மீண்டும் அவர் நடித்த டிராகன் படம் இந்த ஆண்டு வெளியாகி 150 கோடி வசூலை அள்ளியது. அந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.
தீபாவளிக்கு ரெண்டு லட்டு: கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல விக்னேஷ் சிவன் நேற்று மாலை பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்தனர். இந்நிலையில், கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என மைத்ரி மூவி மேக்கர்ஸ் தற்போது டூட் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டு இன்று மாலை வெயிட்டான அப்டேட் வருகிறது என்று அறிவித்துள்ளனர். படத்தின் டீசர் அதிகபட்சமாக வெளியாகும் என தெரிகிறது.
அஜித் படத்தால் வந்த விளைவு?: புஷ்பா 2 படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்தனர். பொங்கலுக்கு அந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அஜித் குமாரின் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குட் பேட் அக்லி ரிலீஸ் தள்ளிப் போனது. விடாமுயற்சி படத்தின் தோல்வி குட் பேட் அக்லி வசூலை பெரிதும் பாதித்தது. இந்நிலையில், அதே போல ஆகிவிடக் கூடாது என்பதற்காக டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தீபாவளிக்கே தங்கள் படத்தையும் ரிலீஸ் செய்து விட வேண்டும் என டூட் படக்குழு முடிவு செய்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ரெண்டுல ஒன்னு தான்: அடுத்தடுத்த அறிவிப்பு பிரதீப் ரங்கநாதனையே தலையை பிய்த்துக் கொள்ள செய்துள்ளது என்கின்றனர். எல்ஐகே பல முறை ரிலீஸ் தேதி அறிவிப்பை வெளியிட்டு தள்ளிப் போன நிலையில், கண்டிப்பாக தீபாவளிக்கு அந்த படம் வெளியாகுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர். இந்த ரெண்டுல ஒரு படம் தான் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என்றும் திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

கருப்பு அடுத்த வருஷம் தானா?: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள கருப்ப்பு திரைப்படம் தீபாவளிக்கு வரும் என்பதால் தான் கார்த்தியின் சர்தார் 2 தீபாவளி ரிலீஸில் இருந்து பின் வாங்கியது. ஆனால், இன்னமும் படத்தின் டிஜிட்டல் விற்பனை நடைபெறவில்லை எனக் கூறப்படும் நிலையில், அடுத்த ஆண்டு தான் கருப்பு படம் வெளியாகுமா என்றும் அதனால் தான் பிரதீப் ரங்கநாதன் படம் தீபாவளிக்கு வருகிறதா என கேள்விகள் கிளம்பியுள்ளன. துருவ் விக்ரமின் பைசன் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் தீபாவளி ட்ரீட்டாக வெளியாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











