சிவகார்த்திகேயனை மிஞ்சிய பிரதீப் ரங்கநாதன்.. எல்ஐகே பிசினஸ் இப்பவே இத்தனை கோடியா?
சென்னை: இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தீபாவளிக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த திரையுலகையே ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
ஏதாவது ஒரு படம் தான் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் இல்லையென்றால் பிரதீப் ரங்கநாதனின் ஒரு படமே இன்னொரு படத்துக்கு எதிரியாக மாறிவிடும் என சினிமா வட்டாரத்தில் பலரும் அறிவுரை வழங்கினாலும் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் படத்தை தீபாவளிக்கே வெளியிடும் முயற்சியில் உள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் தற்போது உச்சியில் இருக்கும் நிலையில், இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் டிராகன் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்கிற முயற்சியில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
100 கோடி நாயகன்: கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் சூப்பரான அறிமுகத்தை பெற்றார். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அவரை வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி 150 கோடி வசூலை ஈட்டியது. தொடர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்து வரும் பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் 100 கோடி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுமாறும் சிவகார்த்திகேயன்: நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் 100 கோடி நாயகனாக பல வருட போராட்டத்திற்கு பிறகே சிவகார்த்திகேயன் அந்த சாதனையை படைத்தார். அந்த படத்தைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படமும் 100 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரின்ஸ், மாவீரன், அயலான் உள்ளிட்ட படங்கள் வசூலில் சொதப்பின. அமரன் படம் 300 கோடி வசூலை கடந்து சிவகார்த்திகேயனை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆனால், மதராஸி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை சிவகார்த்திகேயனுக்கு கொடுக்குமா என்பதே டவுட்டு தான் என்கின்றனர்.
எல்ஐகே பிசினஸ் எகிறுது: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள எல்ஐகே படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே அந்த படத்தின் மீதான பிசினஸ் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்கால காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட்டில் நல்ல விலைக்கு வியாபாரம் பேசப்பட்டு வருவதாகவும் படம் வெளியாவதற்கு முன்பாகவே 100 கோடி பிசினஸ் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டூட் படத்துக்கும் கிராக்கி: சாய் அபயங்கர் இசையில் உருவாகி உள்ள டூட் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள நிலையில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் 200 கோடி வசூல் செய்த நிலையில், டூட் படத்தையும் மிகப்பெரிய அளவில் ப்ரோமோட் செய்து வெளியிட முடிவு செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், தீபாவளி நெருக்கத்தில் கண்டிப்பாக டூட் படம் ரிலீஸ் ஆகாமல் பின் வாங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











