»   »  பிரஷாந்த்தின் பிறந்த நாள் பரிசு

பிரஷாந்த்தின் பிறந்த நாள் பரிசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரஷாந்த்துக்குப் பிறந்த நாள் பரிசாக புலன் விசாரணை -2 படம் அமையும் என அப்படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

ரொம்ப காலத்திற்குப் பிறகு செல்வமணி இயக்கியுள்ள படம் புலன் விசாரணை -2. புலன்விசாரணையை தயாரித்த அ.செ.இப்ராகிம் ராவுத்தர்தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார். அதே செல்வமணிதான் இயக்கியுள்ளார். ஆனால் ஹீரோவை மட்டும் மாற்றி விட்டனர்.

முதல் படத்தில் நடித்த விஜயகாந்தையே இப்படத்திலும் போடாதது ஏன் என்பதை செய்தியாளர்களிடம் விளக்கினார் செல்வமணி.

ஹீரோ பிரஷாந்த் தனது பிறந்த நாளை நேற்று, தி.நகரில் புதிதாக கட்டியிருக்கும் பல மாடி வணிக வளாகத்தில் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சிக்கு ராவுத்தரும், செல்வமணியும் நேரில் வந்து பிரஷாந்த்தை வாழ்த்தினர்.

அப்போது செல்வமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் படம் பிரஷாந்த்துக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமையும். கோலிவுட்டில் இப்படம் புதிய அலையை ஏற்படுத்தும்.

பிரஷாந்த் மிகச் சிறந்த கலைஞர். அவரை வைத்து நான் இரு படங்கள் பண்ணியுள்ளேன். அவரால் எனக்கு ஒரு பிரச்சினையும் வந்ததில்லை.

சில காலமாக நான் படம் இயக்காமல் இருந்து வந்தேன். இப்போதைய ஹீரோக்களின் மனோபாவம் எனக்குப் பிடிக்கவில்லை. அத்தோடு எனது திரையுலக கேரியரும் சரிவில் இருந்தது.

புலன் விசாரணை-2 படத்தையும் விஜயகாந்த்தை வைத்தே நான் இயக்கியிருக்க முடியும். ஆனால் விஜயகாந்த் இப்போது அரசியல் தலைவராகி விட்டார். மேலும், பல்வேறு காரணங்களால் அவரிடம் மீண்டும் செல்ல நான் விரும்பவில்லை.

ஆனால் பிரஷாந்த் அப்படி இல்லை. செம்பருத்தி படத்தின்போது நான் பார்த்த பிரஷாந்த் எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறார்.

புலன் விசாரணை-2 படம் ரசிகர்களுக்கு வித்தியாச விருந்தாக அமையும். தமிழ் உலகை இப்படம் பெரும் பரபரப்பில் ஆழ்த்தும். குற்றப்பத்திரிக்கையில் நான் கற்ற பாடத்திலிருந்து சுதாரித்துக் கொண்டு இப்படத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டுள்ளேன் என்றார் செல்வமணி.

பிரஷாந்த் பேசுகையில், ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகும். அதற்கு நான் உறுதி என்றார்.

பின்னர் தனது அப்பா நடிகர் தியாகராஜனுடன் சென்று முதல்வர் கருணாநிதியையும் சந்தித்து அவரிடம் பிறந்த நாள் வாழ்த்துக்களைப் பெற்றார் பிரஷாந்த்.

புது வாழ்வு பிறக்கட்டும்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil